For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய அரசின் பேச்சை கேட்டு தமிழக அரசு ஆடுகிறது.. பிரகாஷ்ராஜ் கண்டனம்

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு-தலைவர்கள் கண்டனம்- வீடியோ

    தூத்துக்குடி: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டிற்கு பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசு மத்திய அரசின் சொல்படி ஆடுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

    மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. போலீசின் இந்த கண்மூடித்தனமான தாக்குதல் காரணமாக இதில் 12 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் இதைவிட அதிக பேர் பலியாகி இருக்கலாம் என்று அச்சமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Sterlite masscare: Tamilnadu dancing for Centers order says, Prakash Raj

    இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலர் மிகவும் மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளனர். பெண்கள், மாணவர்கள், சிறுவர்கள் என்று பார்க்காமல் போலீஸ் கண்முடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது.

    இந்த மோசமான அரசு படுகொலை காரணமாக தமிழகமே கொதித்துப் போய் உள்ளது. ஸ்டெர்லைட்டில் நடந்த கொடூரம் குறித்து பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அதில் ''போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். எந்த குறிக்கோளும் இல்லாத, முதுகெலும்பு இல்லாத தமிழ்நாடு அரசை பார்த்தால் வெட்கமாக இருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் கண்ணீர் கேட்கிறதா? மாசடைந்த காற்று பற்றிய மக்களின் போராட்டத்தை உங்களால் பார்க்க முடியவில்லையா? இல்லை மத்திய அரசின் சொல்லு ஏற்றபடி ஆடி ஆட்சியில் இருக்கவே நேரம் சரியாக இல்லையா?'' என்று கேள்வி எழுப்பி இருக்கிறது.

    இதில் அவர் ''கேள்வி கேட்கிறேன் (#justasking)" என்ற டேக்கை பயன்படுத்தி இருக்கிறார். இதுவரை மத்திய அரசை மட்டுமே இவர் இதை வைத்து கேள்வி எழுப்பி இருந்தார். தற்போது முதல்முறையாக ஒரு மாநில அரசை இதை வைத்து கேள்விகேட்டுள்ளார்.

    English summary
    Prakash Raj says, KILLING of CITIZENS protesting .. SHAME on Tamilnadu s Visionless .. spineless government.. couldn’t you hear people’s cry of protest.. couldn’t you foresee citizens anguish over pollution concerns OR are you busy dancing to CENTER s tunes to hold on to power .. #justasking on Tuticorin issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X