For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுப்பிரமணியசாமி வீடு மீது கல்வீச்சு… பதற்றம் போலீஸ் குவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே மறியல்களும், கல்வீச்சு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. சென்னை மாநகரம் முழுவதும் ஒருவித அசாதாரண நிலை நிலவி வருகிறது.

கதறி அழுத அதிமுகவினர்

சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் குற்றவாளி என்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டவுடன் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்த பெண்கள் கதறி அழுதனர்.

கடையடைப்பு

அவர்கள் திடீரென போராட்டத்தில் குதித்தனர். இதன் காரணமாக அப் பகுதியில் இருந்த கடைகளும் அடைக்கப்பட்டன. கட்சி அலுவலகம் மற்றும் அதனை சுற்றியிருந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவியது.

கல்வீச்சு, கலவரம்

ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு வெளிவந்தவுடன் அ.தி.மு.க.வினர் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக திரண்டனர். பெரும்பாலான இடங்களில் கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன. தாம்பரம் எம்.ஆர்.எம்.தெரு பகுதியில் ஒரு கும்பல் கடைகள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியது.

சுப்ரமணியசுவாமி வீட்டில்

மயிலாப்பூர், சாந்தோம் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சாமியின் வீட்டின் மீது கல் வீசப்பட்டது. இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு வந்த போலீசார், அதிமுகவினர் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.

உருவபொம்மைகள் எரிப்பு

அம்பத்தூர், வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் கருணாநிதி, சுப்பிரமணியசாமி உருவ பொம்மைகளை அ.தி.மு.க.வினர் எரித்தனர்.

தனியார் நிறுவனங்கள் மூடல்

சென்னையில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுவதால் தனியார் அலுவலகங்கள் அவசரம் அவசரமாக மூடப்பட்டன. ஊழியர்கள் வீடுகளுக்கு கிளம்பினர்.

நடுரோட்டில் மறியல்

அதிமுகவினர் நடுரோட்டில் நின்று கொண்டு ஆங்காங்கே மறியலில் ஈடுபடுகின்றனர். இதனால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

English summary
Upset AIADMK supporters in Chennai after Jayalalithaa is convicted of corruption by Bangalore court. Stone pelting at Subramanian swamy's chennai residence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X