For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராத்திரி 10 மணிக்கு பீச்சில் பைக் ரேஸ் விட்டு சாலையைக் கடந்தவரின் காலை உடைத்த மாணவர் கைது

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அடையாரிலிருந்து மெரீனா கடற்கரை வரை பைக் ரேஸ் போய், சாலையைக் கடந்தவர் மீது அவரது காலை முறித்த என்ஜீனியரிங் கல்லூரி மாணவரைப் போலீஸார் கைது செய்தனர். அவரது நண்பர்கள் ஐந்து பேரும் சேர்த்துக் கைதானார்கள்.

கலங்கரை விளக்கம் வரை பைக் ரேஸ் நடப்பதாக இரவு 10 மணியளவில் போலீஸுக்குத் தகவல் வந்தது. இதையடுத்து அடையார் போக்குவரத்துப் போலீஸார் கண்காணிப்பில் இறங்கினர்.

அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் மின்னல் வேகத்தில் வந்ததைப் பார்த்த போலீஸார் அவர்களைப் பிடிக்க தங்களது வாகனங்களில் துரத்தினர். போலீஸாரைப் பார்த்ததும் பீதியடைந்த பைக் ரேஸ் சென்றவர்கள் அதி வேகமாக போனார்கள்.

அதில் 2 பைக்கில் வந்தவர்கள் வேறு பக்கம் ஓடி விட்டார்கள். ஒரு பைக்கில் போனவர்கள், சாந்தோம், சவுத் கேனால் பேங்க் சாலையில் போன ஒருவர் மீது பலமாக மோதி விட்டனர். இதில் சாலையைக் கடக்க முயன்றவர் படுகாயமடைந்து கீழே விழுந்தார். அவரது கால் முறிந்து போனது.

அதேசமயம் பைக்கை ஓட்டி வந்த நபரும் படுகாயமடைந்து கீழே விழுந்து துடித்தார். அந்த நபரைப் போலீஸார் மீட்டனர். விசாரணையில் அந்த நபரின் பெயர் அனுப் என்பதும் என்ஜீனியரிங் படித்து வருவதும், திருவான்மியூரைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.

அவரிடம் கிடைத்த தகவலின் மற்ற ஐந்து பேரான கல்லூரி மாணவர் யோகேஸ்வரன், அவரது நண்பர்கள் சசிகுமார், ராஜா, ஜெயம், லோகேஸ் ஆகியோரும் சிக்கினர்.

பலமுறை போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்தும் கூட பைக் ரேஸ் அட்டகாசம் இப்பகுதியில் இன்னும் ஓயவி்ல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திமிர்பிடித்து இதுபோல பைக் ரேஸில் ஈடுபடுபவர்களை பேசாமல் குண்டர் தடைச் சட்டத்தில் கைது செய்தால் நலமாக இருக்கும் என்று பாதிக்கப்பட்டவர்கள் குமுறலுடன் கூறுகிறார்கள்.

English summary
An engineering student was arrested for bike race in Marina beach.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X