For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

500 ரூபாய்க்கு சோலார் விளக்கு.. 5 வருடம் யூஸ் பண்ணலாம்.. செங்கை மாணவரின் சாதனை!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மின் பற்றாக்குறை அடிக்கடி ஏற்படுகின்ற நிலையில் அடித்தட்டு மக்களும் பயன்பெறும் வகையில் ரூபாய் 500 மதிப்பீட்டில் 5 ஆண்டுக்கு பயன்படும் வகையில் சூரிய சக்தி விளக்கை கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார் மாணவர் ஒருவர்.

செங்கல்பட்டினைச் சேர்ந்த தாஜூதீன் என்னும் அம்மாணவர் ஒரு பி.டெக் பட்டதாரி. அப்பா அஹசனூதீன், கால்நடை மருத்துவர். அம்மா, ஜெரினாசுல்தான். இவர் மூன்றாவது மகன்.

செயின்ட் ஜோசப் மேல் நிலைப்பள்ளில் படித்துவிட்டு சென்னை வந்து பி.டெக் முடித்துள்ளார். ஒருநாள் இணையதளத்தின் மூலமாக அவருக்கு தென்அமெரிக்காவை சேர்ந்த ஒரு நண்பர் அறிமுகமாகியுள்ளார்.

சூரிய ஒளி விளக்கு:

சூரிய ஒளி விளக்கு:

3 வருடங்களுக்கு முன்பு அவருடைய வழிகாட்டுதலுடன் சூரிய ஒளியில் எரியும் விளக்கை தயாரித்துள்ளார் தாஜூதீன்.

ஏழைக்களுக்காக:

ஏழைக்களுக்காக:

இந்நிலையில் சமூக நல ஆர்வலரான பார்த்திபன் என்பவர், "ரொம்ப குறைஞ்ச செலவுல ஐந்து ஆண்டுகள் பயன்படுத்தறா மாதிரி சூரிய விளக்கை தயாரிச்சிருக்கீங்க. இது ஏழைகளுக்கு பயன்படனும்" என்று கூறியுள்ளார்.

மும்பையில் முதலில்:

மும்பையில் முதலில்:

இதனையடுத்து மும்பை, தாரவி சென்று அங்குள்ள குடிசை வீடுகளுக்கு இந்த விளக்கினை தயாரித்து கொடுத்துள்ளார். தாஜூதீன் ரூபாய் 20 செலவில் இருட்டான வீடுகளில் பகலில் மட்டும் வெளிச்சம் கொடுக்கும் வகையில் சூரிய மின்விளக்கை செய்து கொடுத்திருக்கிறார். இதன் செய்முறையையும் அங்குள்ள இளைஞர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்.

5 வருடங்களுக்கு கவலையில்லை:

5 வருடங்களுக்கு கவலையில்லை:

‘‘சூரிய ஒளியை சோலார் பேனல் உள்வாங்கி பேட்டரில சேமிக்கும். நைட் சுவிட்ச் போட்டதும் வெளிச்சம் வரும். இதுக்கான செலவு வெறும் ரூபாய் 500தான். ஆனா, ஐந்து வருடங்கள் தாக்குப் பிடித்து வெளிச்சம் தரும்'' என்கிறார் தாஜூதீன்.

English summary
Youngster from Chengalpat found a new solar light which can be used by poor also.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X