For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாணவன் தந்தை மரணத்திற்கு அரசின் அஜாக்கிரதையே காரணம்: உறவினர் குற்றச்சாட்டு

கிருஷ்ணசாமியின் மரணத்திற்கு தமிழக அரசே காரணம் என மாணவனின் உறவினர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மாணவன் தந்தை மரணத்திற்கு அரசின் அஜாக்கிரதையே காரணம்-வீடியோ

    சென்னை: மாணவன் தந்தை மரணத்திற்கு அரசின் அஜாக்கிரதையே காரணம் என கிருஷ்ணசாமியின் உறவினர் ராஜேஸ்வரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

    எர்ணாகுளம் நாளந்தா பள்ளியில் நீட் தேர்வை கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவர் எழுதிக் கொண்டிருந்த நிலையில், அவரது தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
    கடந்த 2 தினங்களில் நீட் தேர்வின் காரணமாக ஏற்பட்ட தொடர்ச்சியான மன உளைச்சல்களால் கிருஷ்ணசாமி மரணமடைந்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த மரணம் குறித்து அவரது உறவினர் ராஜேஸ்வரி கூறும்போது, கிருஷ்ணசாமி தனது மொத்த உலகமும் அவரது மகன்தான் என்று வாழ்ந்ததாக தெரிவித்தார்.

    Students father death cause of the TN Govt.

    மேலும் தன் மகனை ஒரு செஸ் சாம்பியனாக்கி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட கிருஷ்ணசாமி, அதற்காக நிறைய பாடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தமிழகத்திலேயே இந்த நீட் தேர்வு நடைபெற மாநில அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதே என ஆதங்கப்பட்ட ராஜேஸ்வரி, அலட்சியம், அஜாக்கிரதை காரணமாகவே இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த துயரத்திலிருந்து அந்த குடும்பம் மீள்வது மிகவும் கடினம் என்றும் வேதனையுடன் ராஜேஸ்வரி கூறினார்.

    English summary
    Relative alleged that the student's father Krishnasamy was responsible for the death of Tamil Nadu. Rajeshwari, ignorant, said that the death of the state government in the Tamil Nadu government's failure to take this action has taken place, and this pain is very difficult for the family to get out of this tragedy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X