For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனித உரிமை ஆணையத்தில் ஆஜரான மாணவி சோபியா.. தமிழிசை குறித்து வாக்குமூலம்!

பாஜக ஆட்சியை விமர்சித்த சோபியா இன்று தூத்துக்குடி மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக தன்னுடைய வாக்குமூலத்தை பதவி செய்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மனித உரிமை ஆணையத்தில் ஆஜரான மாணவி சோபியா-வீடியோ

    தூத்துக்குடி: பாஜக ஆட்சியை விமர்சித்த மாணவி சோபியா இன்று தூத்துக்குடி மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் போலீசுக்கு எதிராக தன்னுடைய வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

    கடந்த செப்டம்பர் 3-ம் தேதி தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசைக்கு எதிராக மாணவி சோபியா 'பாசிச பாஜக ஆட்சி ஒழிக'' என்று கோஷமிட்டார். அவரின் இந்த கோஷம் பெரிய அளவில் வைரல் ஆனது.

    அவர் இட்ட ''பாசிச பாஜக ஆட்சி ஒழிக கோஷம்'' இணையத்தில் டிரெண்ட் ஆனது. இதனால் தமிழிசை அவருக்கு எதிராக புகார் அளித்தார்.

    கைது

    கைது

    தமிழிசை அளித்த புகாரின்பேரில் போலீசார் சோபியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இரவோடு இரவாக சோபியா கைது செய்யப்பட்டார். அதன்பின் மறுநாள் காலை அவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். மாணவி சோபியாவுக்கு ஜாமின் வழங்கியது தூத்துக்குடி நீதிமன்றம். அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கப்பட்டது.

    புகார் அளித்தனர்

    புகார் அளித்தனர்

    இந்த நிலையில் தமிழிசைக்கு எதிராக சோபியாவும் அவரது தந்தையும் கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புகார் அளித்தனர். அதேபோல் வழக்கு தொடுத்ததற்கு எதிராகவும் புகார் அளித்தனர். ஆனால் தமிழிசை மீது போலீஸ் எந்த விதமான நடவடிக்கையும் அப்போது எடுக்கவில்லை.

    மனித உரிமை ஆணையம்

    மனித உரிமை ஆணையம்

    இதனால் சோபியாவின் தந்தை ஏ.ஏ.சாமி மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். காவல் துறைக்கு எதிராகவும், தமிழிசைக்கு எதிராகவும் புகார் அளித்தார். இதில் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும், விசாரணையின் போது சோபியாவும் உடன் இருக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

    இன்று விசாரணை

    இன்று விசாரணை

    இந்த நிலையில் இன்று மூவரையும் மனித உரிமைகள் ஆணையம் விசாரித்தது. ஆணைய உறுப்பினரான நீதிபதி டி.ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணை நடந்தது. திருநெல்வேலியில் உள்ள ஆய்வு மாளிகையில் இந்த விசாரணை நடந்தது. போலீஸ் நடந்து கொண்ட விதம் குறித்தும், தமிழிசை நடந்து கொண்ட விதம் குறித்தும் விசாரிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Student Sophia appeared in front of the Human Rights Commission against police and Tamilisai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X