For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவை: வேளாண் படிப்புகளில் சேர இன்று மதியம் 3 மணி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

வேளாண் படிப்புகளில் சேர இன்றுமுதல் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம்.

By T Nandhakumar
Google Oneindia Tamil News

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் இளநிலை படிப்புகளில் சேர இன்று மதியம் 3 மணி முதல் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலையின் 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 26 இணைப்பு கல்லூரிகளில், 12 இளநிலை படிப்புகள் உள்ளது. மொத்தம் 3,422 இடங்களுக்கு 65 சதவீத இடங்கள் தமிழ்நாடு வேளாண் பல்கலையாலும் 35 சதவீத இடங்கள் அந்தந்த கல்லூரிகளாலும் நிரப்பப்பட்டு வருகிறது.

students can apply for joining agricultural studies today

இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று மதியம் 3 மணி முதல், www.tnau.ac.in/admission.html என்ற இணைய தளம் மூலமாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யலாம். ஜூன் 17 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்த பின்னர், விண்ணப்ப கட்டணத்தை இணைய தள வங்கி சேவை அல்லது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வழியாக செலுத்தலாம்.

இத்தகைய வசதிகள் இல்லாதவர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட செலானை பயன்படுத்தி எந்தவொரு ஸ்டேட் வங்கி கிளையிலும் கட்டணத்தை செலுத்தலாம். தரவரிசை பட்டியல், ஜூன் 22 ல் வெளியிடப்பட உள்ளது. இதனையடுத்து முதல் கட்ட கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் இணையதளம் வழியாக வருகிற ஜூலை 9 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.

English summary
Applicants can apply the Agricultural University of Tamilnadu from the 3'o clock afternoon. The application can be completed and uploaded through www.tnau.ac.in/admission.html. You can apply till June 17.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X