For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரிவுபசாரம்னா இது..."குத்து" பாட்டுடன் பேராசிரியரை வழியனுப்பிய மதுரை மருத்துவ மாணவர்கள்!

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் செல்வசிதம்பரத்திற்கு வித்தியாசமாக மாணவர்கள் ஆடிப்பாடி குத்துப்பாட்டுடன் பிரிவு உபசார விழா நடத்தி கலக்கி விட்டனர்.

மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் பேராசியராக பணி புரிந்து வந்தவர் செல்வ சிதம்பரம். இவர் கடந்த மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

students farewell for Professor

மருத்துவ மாணவர்கள் மற்றும் சக மருத்துவர்களிடம் நன்றாகப் பழகிய செல்வ சிதம்பரத்திற்கு பிரிவு உபச்சார விழாவை கோலாகமாக நடத்த அவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, மலர்களால் அறிமுகம் செய்யப்பட்ட காரில் அழைத்து வரப்பட்ட செல்வ சிதம்பரத்திற்கு ஆடல், பாடல் நிகழ்ச்சியுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பிரிவு உபச்சார விழா முடிவடைந்தவுடன் மீண்டும் ஆடல், பாடலுடன் அவரை வழியனுப்பி வைத்தனர்.

அதிலும் அவர் காரில் ஏறும்போது பொதுவாக என் மனசு தங்கம்... ஒரு போட்டியினு வந்துவிட்டா சிங்கம்' பாடலை பேண்டு வாத்தியங்கள் மூலம் வாசிக்க, அதற்கு மற்ற மருத்துவர்களோடு சேர்ந்து செல்வ சிதம்பரமும் நடனம் ஆடி மகிழ்ந்தார்.

இந்த ஆட்டம் பாட்டத்துடன் கூடிய பிரிவுபசார நிகழ்ச்சி தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

அது மட்டுமின்றி செல்வ சிதம்பரத்திற்கென தனியாக பேஸ்புக்கில் ரசிகர் பக்கம் ஒன்றும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
The video of students giving farewell to their professor in Madurai is viral now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X