For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசுக்கு எதிரான செயல்களில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது.. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் எச்சரிக்கை!

அரசுக்கு எதிரான செயல்களில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது என தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.

By Kalai Mathi
Google Oneindia Tamil News

சென்னை: அரசுக்கு எதிரான செயல்களில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது என தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.

அண்மையில் கேரள மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தலித் மற்றும் இடதுசாரி செயற்பாட்டாளர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மாணவர்கள் அரசுக்கு எதிரான அனுமதிக்கப்படாத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அனுமதிக்கப்படாத நடவடிக்கைள்

அனுமதிக்கப்படாத நடவடிக்கைள்

இதுதொடர்பாக கடந்த திங்கள் கிழமை பல்கலைக்கழகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் 'மாணவர்கள் சிலர் அனுமதிக்கப்படாத சில நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கொள்கைகளுக்கு எதிராக

கொள்கைகளுக்கு எதிராக

அதாவது பொது இடத்தில் கூடி போராட்டம் நடத்துதல், பேரணி நடத்துதல், அரசுக்கு எதிரான அதிருப்தி கருத்துக்களை தெரிவிப்பது மற்றும் அரசின் கொள்கைகளுக்கு எதிராக போராடுவது போன்ற நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது'.

தடை விதிக்கப்படுகிறது

தடை விதிக்கப்படுகிறது

பல்கலைக்கழக ஒழுங்குவிதிகள் "கல்வி மற்றும் ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களைத் தவிர, அரசியல், மதம் அல்லது வேறு எந்த விஷயங்களுக்கான கூட்டத்திற்கு" தடை விதிக்கிறது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகுடி பல்கலை

நீலகுடி பல்கலை

திருவாரூர் மாவட்டம் நீலகுடியில் அமைந்துள்ள பல்கலைக்கழகம், அரசின் கொள்கைகளுக்கு எதிராக மாணவர்கள் கருத்து தெரிவிக்க கூடாது என்ற இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

English summary
Tamilnadu central university has released circuler that students not to dissent against government policies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X