ஆபாசமாக பேசும் பேராசிரியர்- போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

Google Oneindia Tamil News

நெல்லை: பாலியல் தொல்லை கொடுப்பதாக வரலாற்று துறை பேராசிரியர் மீது மாணவிகள் குற்றம் சாட்டி போராட்டத்தில் குதித்து வருவதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் வரலாற்று துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் வின்சென்ட் ராஜேஸ். இவர் வகுப்பில் செக்ஸ் உணர்ச்சியை தூண்டும் விதமாக பேசுவதாகவும், மாணவிகளின் அழகை பற்றி வர்ணிப்பதாகவும் கூறி மாணவிகள் துறை தலைவர் மரியஜானிடம் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தன் மீது புகார் கொடுத்தவர்களை செமஸ்டர் தேர்வில் பெயில் ஆக்கி விடுவேன் என்று வினோத் மிரட்டியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு. உயர் கல்வி துறை செயலாளர், பல்கலை கழக பதிவாளரிடம் மாணவர்கள் மனு கொடுத்துள்ளனர்.

புகார் கொடுத்து பல நாட்கள் ஆகியும் வினோத் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து வரலாற்று துறை மாணவ, மாணவிகள் திடீரென மாலை போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் பல்கலை கழக வாளகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்தனர். தகவல் அறிந்ததும் பல்கலை கழக பதிவாளர் ஜான் பிரிட்டோ மாணவிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தார். மாணவிகள் பதிவாளர் நேரடியாக வந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும், உதவி பேராசிரியர் வினோத் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

இதுகுறித்து பல்கலைகழக பதிவாளர் ஜான் பிரிட்டோ கூறுகையில், பேராசிரியர் மீது மாணவிகள் கொடுத்துள்ள புகாரின் பேரில் பல்கலைக் கழக பெண்கள் பாதுகாப்பு நலத்துறையின் தலைவர் இன்று பேச்சு வார்த்தையில் ஈடுபடுவார் என்று தெரிவித்தார். இன்று காலை 10 மணி மற்றும் 2 மணிக்கு மாணவிகள் மற்றும் உதவி பேராசிரியரிடம் பேச்சு வார்த்தை நடததப்பட்டு இதற்கு தீர்வு எட்டப்படும் என அவர் தெரிவித்தார். இந்த போராட்டம் காரணமாக அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X