For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெப்சி, கோக் நீர் எடுக்க தடை நீக்கம்.. தாமிரபரணி ஆற்றில் இறங்கி மாணவர்கள் போராட்டம்

நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து பண்னாட்டு குளிர்பான ஆலைகள் நீர் எடுக்க தடை நீக்கப்பட்டதை எதிர்த்து ஆற்றில் இறங்கி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.

By Vazhmuni
Google Oneindia Tamil News

நெல்லை : நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து பண்னாட்டு குளிர்பான ஆலைகள் நீர் எடுக்க தடை நீக்கப்பட்டதை எதிர்த்து நெல்லை தாமிரபரணி ஆற்றில் இறங்கி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.

தாமிரபரணி ஆற்றில் இருந்து பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களான பெப்சி, கோக் ஆலைகளுக்கு தண்ணீர் எடுப்பதற்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை அனுமதி அளித்து, தண்ணீர் எடுப்பதற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 Students Protest aganinst Madras High Court lifts stay on using Thamirabarani river water

இதனால் பெப்சி, கோக் நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதை எதிர்த்து நெல்லை தாமிரபரணி ஆற்றில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாலை ஊற்றி போராட்டம் நடத்தினர்.

அப்போது போராட்டம் நடத்தியவர்கள் கூறுகையில், தாமிரபரணி ஆற்றில் பெப்சி, கோக் நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதை எதிர்த்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்தனர். மேலும் தாமிரபரணி ஆற்றை காப்பதற்கு தமிழக அரசு தவறி விட்டதாக குற்றம்சாட்டினர்.

இந்த நிலை நீடித்தால், விரைவில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக மாணவர்கள், இளைஞர்கள் அப்போது அறிவித்தனர்.

இதனைதொடர்ந்து , போராட்டம் நடத்திய அனைவரையும் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

English summary
Students Protest aganinst Madras High Court lifts stay on using Thamirabarani river water. n November 2016, the court had banned Pepsi and Coke from using the river's water for their bottling plant on a plea that these companies were depriving farmers of their livelihood
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X