For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகத் தமிழர் இதயத்தில் சிம்மாசனமாக இருப்பவர் கருணாநிதி: திருநாவுக்கரசர் Exclusive

திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    உலகத் தமிழர் இதயத்தில் சிம்மாசனமாக இருப்பவர் கருணாநிதி

    சென்னை: திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒன் இந்தியாவிற்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் கருணாநிதியை வாழ்த்தி பேசியுள்ளார்.

    திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் இந்தியா முழுக்க இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் வல்லுநர்கள், தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    மு.கருணாநிதியின் நாகை மாவட்டம் திருக்குவளையில் 1924ம் ஆண்டு பிறந்தார். திமுக தோழமை கட்சி தலைவர்கள் அவரை குறித்து ஒன் இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளனர்.

    பெரிய சாதனை

    பெரிய சாதனை

    இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக 50 ஆண்டுகள் ஒரு கட்சியை தலைமை ஏற்று நடத்திய வரலாறு மு.கருணாநிதிக்கே சேரும். 5 முறை முதல்வராக இருந்துள்ளார். இந்திய சட்டமன்ற வரலாற்றில் 1952 தேர்தல் தவிர்த்து 13 தேர்தல்களில் கருணாநிதி போட்டியிட்டு எல்லா தேர்தலிலும் மாபெரும் வெற்றியை பெற்று சாதனை படைத்தவர் கருணாநிதி அவர்கள். பெரியார், அண்ணா ஆகியோருடன் நெருக்கமாக இருந்து, திராவிட கழகத்தின் தொடக்க காலத்தில் இருந்து அயராது உழைப்பவர் கருணாநிதி.

    பல திறமை

    பல திறமை

    சிலருக்கு பேச வரும், சிலருக்கு எழுத வராது, சிலருக்கு பொதுமேடையில் பேச வரும், சட்டமன்றத்தில் பேச வராது, சிலருக்கு சட்டமன்றத்தில் பேச வரும் பொது மேடையில் பேச வராது, ஆனால் கருணாநிதிக்கு எல்லாம் கைவரப்பெற்றுள்ளது. முத்தமிழிலும் புலமை பெற்றவர் எழுத்துலகின் அனைத்து பிரிவிலும் தனித்தனிமையை நிரூபித்தவர். கடிதம், சிறுகதை,தொடர்கதை, நாவல், கட்டுரை என தமிழன்னைக்கு அலங்காரம் செய்தவர். குறளோவியம், தொல்காப்பியம் அணிந்துரை என 100க்கும் அதிகமான புத்தகம் எழுதியுள்ளார்.

    புகழ் மாலை

    புகழ் மாலை

    ஒரு காலத்தில் எம்ஜிஆர், சிவாஜிக்கு திரையில் கைதட்டல் வரும், ஆனால் எழுத்திற்காக கருணாநிதி கைத்தட்டல் வாங்கியுள்ளார். சிறந்த பேச்சாளர், சிறந்த தலைவர், நன்றாக சிந்திக்க கூடியவர். நகைச்சுவை உணர்வு என எல்லா திறமையும் ஒருங்கே பெற்றவர் கருணாநிதி. உலகம் எங்கும் வாழும் தமிழக மக்களின் இதயத்தின் சிம்மாசனம் போட்டு இருப்பவர். உலக தலைவர்கள், தேசிய தலைவர்களால் மதிக்க கூடியவர். 80 வருட பொது. வாழ்க்கை. 14 வயதில் இருந்து பொது வாழ்வில் ஈடுபட்டு வருகிறார்..

    பெரிய நட்பு

    பெரிய நட்பு

    சுமார் 40 ஆண்டுகள் அவருடன் பயணித்து இருக்கிறேன். அவருடன் இருந்த போதும் எதிர்த்து வேறு கட்சியில் இருந்த போதும் அவர் மீது எனக்கு மரியாதையை அன்பு இருந்துள்ளது. அதிமுகவில் இருந்த போது, அவர் என்னுடைய திருமணத்தில் கலந்து கொண்டார். என் பிள்ளைகளின் திருமணத்தில் எல்லாம் கலந்து கொண்டுள்ளார். எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்துள்ளார். சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கையை எல்லாம் நிறைவேற்றினார்.

    வாழ்த்துகள்

    வாழ்த்துகள்

    தொகுதி வளர்ச்சி நிதியை உயர்த்தினார். எம்எல்ஈக்களின் அதிகாரத்தை அதிகப்படுத்தினார். இப்படி ஆயிரம் விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். அவருன் பழகிய நாட்கள் அழகானவை. அவர் நூறாண்டுகள் வாழ என் சார்பாகவும், காங்கிரஸ் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன், என்றுள்ளார்.

    English summary
    Su. Thirunavukkarasar wishes DMK Leader M.Karunanidhi- Exclusive Interview.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X