For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனி நாகரிகம் பயன்படாது!

By Shankar
Google Oneindia Tamil News

- சுபவீ

ஏறு தழுவுதல் (சல்லிக்கட்டு) விளையாட்டுக்கு அனுமதி வேண்டி, மதுரை, அவனியாபுரத்தில், திரைப்பட இயக்குநர் கவுதமன் மற்றும் பலர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது, தமிழக அரசின் காவல்துறை தடியடி நடத்தி அவர்களைக் கலைத்திருக்கிறது. இது மிகுந்த கண்டனத்திற்குரியது. ஜனநாயக உரிமைக்கு எதிரானது. அதற்குக் காரணமான காவல் துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Subavee condemns Subramaniya Swamy

இச்செயலை, எதிர்க்கட்சித் தலைவர் தளபதி ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் பல்வேறு கட்சியினர் கண்டித்துள்ளனர். ஆனால், சுப்பிரமணிய சாமி, 14.01.2017 அன்று இரவு 10 மணிக்குத் தன் ட்விட்டர் பகுதியில் வெளியிட்டுள்ள பதிவு, நாகரிகமற்ற, கயமைத்தனமான ஒன்றாக உள்ளது. ஆங்கிலத்தில் உள்ள அப்பதிவு இதுதான்:-

"Today, the TN govt has thrashed all porukkis who tried flouting
SC stay order on Jallikkattu. Are OPS and VKS also not Tamil
anymorre. Ha!ha!"

(உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மீற முயன்ற அனைத்துப் பொறுக்கிகளையும், இன்று தமிழக அரசு அடித்து நொறுக்கியுள்ளது. ஓ. பன்னீர் செல்வம், வி.கே.சசிகலா ஆகியோரும் கூட இனிமேல் தமிழர்கள் இல்லையா. ஹா ஹா!)

உரிமைகளுக்குப் போராடிய இளைஞர்களைப் "பொறுக்கிகள்" என்கிறார் சு.சாமி. எவ்வளவு திமிர்! பா.ஜ.க. அந்த ஆளை, 'டாக்டர் சாமி' என்று தலையில் தூக்கி வைத்து ஆடுகிறது. மானமுள்ள தமிழர்கள் சு.சாமியையும், பா.ஜ.க.வையும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும்.

அது மட்டுமல்லாமல், நாகரிகம் இனிமேல் பயன்படாது என்று தெரிந்துவிட்டதால், நாமும் சற்று நம் கண்ணியமான போக்கை விட்டுக் கீழிறங்கித்தான் வர வேண்டியுள்ளது. பா.ஜ.க. அவரை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும். நாம் அனைவரும் இனி அவரை, அவருக்குப் பிடித்த சொல்லால் "பொறுக்கி சாமி" என்றே அழைப்போம்.

பொறுக்கி சாமி

பொறுக்கி சாமி

பொறுக்கி சாமி!

English summary
Prof Subavee has strongly condemned BJP MP Subramanya Swamy for using the word Prukkis against Tamils who fought for Jallikkattu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X