For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. கல்லறையில் எடப்பாடி எப்போது? ஜெ. என்ன யோகா டீச்சரா? சுப.வீ. 'பொளேர்'

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், தீபாவைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி எப்போது தியானத்தில் அமருவார் என பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் தலையெடுக்க விரும்புகிறவர்களுக்கு 'கல்லறை தியான' வியாதி வந்துவிட்டதுபோல.. அதுவும் இரவு நேரத்தில் திடீர் திடீரென ஜெயலலிதாவின் கல்லறையில் அமர்ந்து தியானம் மேற்கொள்வது தொடர் கதையாகி வருகிறது.

ஜெயலலிதாவின் கல்லறைதான் தற்போது அரசியல் திருப்பங்களுக்கு மையமாக இருந்து வருகிறது. திடீரென இரவு நேரத்தில் ஓ. பன்னீர்செல்வம் ஜெயலலலிதாவின் கல்லறைக்குப் போய் 40 நிமிடம் தியானம் செய்தார்.

Subavee's comments on Deepa's meditate at Jayalalithaa's burial site

பின்னர் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அரசாங்க சொத்தை கொள்ளையடித்து தண்டனை பெற்ற குற்றவாளி சசிகலா, சிறைக்குப் போவதற்கு முன்னர் ஜெயலலிதாவின் கல்லறைக்குப் போய் 3 முறை ஓங்கி அடித்து சத்தியம் செய்துவிட்டுப் போனார்.

இப்போது நானே உண்மையான வாரிசு என பேசிவரும் தீபாவும் திடுதிப்பென ஜெயலலிதாவின் கல்லறைக்கு போய் 45 நிமிடம் தியானம் மேற்கொண்டார். இது குறித்து திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலர் பேராசிரியர் சுப.வீர்பாண்டியன் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

ஜெ கல்லறையில் தீபா 45 நிமிடங்கள் தியானம். பன்னீரை விட 5 நிமிடங்கள் கூடுதல். அடுத்து வருபவர் 50 நிமிடங்களாவது அமர வேண்டும். எடப்பாடி எப்போது?

ஒரு நண்பர் கேட்கிறார், "ஜெயலலிதா என்ன யோகா டீச்சரா?"

இவ்வாறு சுப.வீரபாண்டியன் பதிவிட்டுள்ளார்.

English summary
Dravida Iyakka Thamizhar Peravai General Secretary Prof. Suba Veerapandian tweet on O Panneerselvam and Deepa's meditate at Jayalalithaa's burial site.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X