For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல்வர் பதவிக்கு தகுதியில்லாதவர் ஓபிஎஸ்... ஆளுநர் துரோகம் செய்துவிட்டார்! - சு சுவாமி

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் புதிய ஆட்சி அமைக்கும் விஷயத்தில் ஆளுநர் சட்டத்துக்கு துரோகம் செய்துவிட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார் பாஜக எம்பி சுப்பிரமணியசாமி.

மேலும் மெஜாரிட்டி எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ள சசிகலாவை ஆட்சிஅமைக்க அழைப்பதில் சட்டரீதியாக முடிவெடுக்க மத்திய அரசின் அனுமதியையோ அல்லது வேறு யாருடைய அனுமதியையும் ஆளுநர் பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

Subramanya Swamy blasted OPS and Governor

இன்று ஆளுநரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளார் சுப்பிரமணிய சாமி. அதற்கு முன் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டேன் என்று பன்னீர்செல்வம் கூறியிருப்பது கோழைத்தனம். பன்னீர் செல்வத்துக்கு திறமையில்லை, முதல்வராக இருப்பதற்கும் அவர் தகுதியில்லாதவர். இவ்வளவு பயம் உள்ளவர் முதல்வர் பொறுப்புக்கு ஏன் ஆசைப்பட வேண்டும்?

முதல்வரின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில் அதனை மீண்டும் வாபஸ் பெறுவது என்பது முடியாது என்றும், சட்டத்தில் அதற்கு அனுமதியில்லை.

சசிகலாவிடம் பெரும்பான்மை அதிமுக உறுப்பினர்கள் உள்ளனர். அதற்கான பட்டியலைும் அவர் அளித்துள்ள நிலையில், சசிகலாவுக்கு முதல்வர் பதவிப் பிரமாணம் செய்து வைத்து பலத்தை நிரூபிக்கச் செய்திருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யத் தவறிவிட்டார் வித்யாசாகர் ராவ்," என்றார்.

Subramanya Swamy has blasted O Panneer Selvam and Governor Vidhyasagar Rao for violating the constitutional rules.

English summary
Subramanya Swamy has blasted O Panneer Selvam and Governor Vidhyasagar Rao for violating the constitutional rules.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X