For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீடியோ அழைப்பின்போதே தீவிபத்து.. தீ சுவாலையை பார்த்தேன்.. சூடானில் இறந்த தமிழரின் மனைவி கண்ணீர்

Google Oneindia Tamil News

Recommended Video

    சூடான் நாட்டு ஓடு ஆலையில் பயங்கர தீ விபத்து.. 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு

    பண்ருட்டி: வீடியோ அழைப்பின் போதே தீவிபத்து ஏற்பட்டதாக சூடானில் செராமிக் ஓடு தயாரிக்கும் ஆலையில் நடந்த தீவிபத்தில் இறந்த பண்ருட்டி இளைஞரின் மனைவி கண்ணீருடன் பேட்டி அளித்தார்.

    சூடான் தலைநகர் கார்துமில் செராமிக் ஓடுகள் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நேற்று கேஸ் டேங்கர் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

    இதில் ஆலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. 200-க்கும் அதிகமானோர் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில் 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் என மொத்தம் 23 பேர் பலியாகிவிட்டனர்.

    சூடான் தீவிபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்து அறிய அவசர எண் அறிவிப்பு சூடான் தீவிபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்து அறிய அவசர எண் அறிவிப்பு

    இந்திய தூதரகம்

    இந்திய தூதரகம்

    இந்த விபத்தில் காயமடைந்த தமிழர்களான ஜெயக்குமார், முகமது சலீம் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், ராஜசேகர், வெங்கடாசலம் ஆகியோர் காணாமல் போய்விட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    கோரிக்கை கடிதம்

    கோரிக்கை கடிதம்

    இவர்களில் ராஜசேகர் இறந்துவிட்டதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். மேலும் தனது கணவரின் உடலை மீட்டு தரும்படி கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை கடிதம் அளித்துள்ளார்.

    கடலூர் மாவட்டம்

    கடலூர் மாவட்டம்

    ராஜசேகர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர். இவர் சூடான் நாட்டில் செராமிக் ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது நடந்த தீவிபத்தில் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து அவரது மனைவி கண்ணீர் பேட்டி அளித்தார்.

    தீ சுவாலை

    தீ சுவாலை

    அதில் அவர் கூறுகையில் சூடான் நாட்டில் செராமிக் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது எனது கணவர் ஓய்வு நேரத்தில் எனக்கு வீடியோ கால் செய்து பேசினார். இருவரும் பேசிக் கொண்டிருந்த போதே ஆலையில் தீ சுவாலையை பார்த்தேன்.

    மீட்க வேண்டும்

    மீட்க வேண்டும்

    அப்போது தீ ஆலை முழுவதும் பரவியது. இதையடுத்து எனது கணவரின் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தற்போது அவர் இறந்துவிட்டார். எனது கணவரின் உடலை இந்திய தூதரகம் மீட்டு தரவேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை வைத்தார்.

    English summary
    Wife of Tamil youth Rajasekar who died in Sudan tanker blast says that he was died while he was in video call with her.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X