For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னையில் பரவலாக மழை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மற்றும் அதன் வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சேப்பாக்கம், கிண்டி, சென்ட்ரல், அம்பத்தூர் மற்றும் ஆவடி உள்ளிட்ட இடங்களில் பிற்பகலில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மத்திய மேற்கு வங்கக்கடல் வளிமண்டல பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் விசாகப்பட்டினம் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் விளைவாக 48 மணிநேரத்திற்கு தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

Sudden showers cool Chennai, more expected today

அதன்படி இன்று சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கியது. பள்ளிகள் விடும் நேரத்தில் மழை பெய்ததால் மாணவர்கள் நனைந்து கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்.

மத்திய மேற்கு வங்கக்கடல் வளிமண்டல பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் விசாகப்பட்டினம் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும். சென்னையின் சில பகுதிகளில் சில நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்று இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார். திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளது.

English summary
After the blazing heat earlier in the week, a sudden downpour brought down the temperature in the city on Friday. The Met department has forecast rain for the entire state on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X