For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருகும் கரும்பை காப்பாத்த கடன் தேவை- குமுறும் காஞ்சிபுரம் விவசாயிகள்

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: தமிழகத்தில் கரும்பு பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி போவதால் விவசாயிகள் பரிதவித்து போயுள்ளனர்.

கடனுதவி அளித்தால் மட்டுமே கரும்பைக் காப்பாற்ற முடியும் என்று அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

15 ஆண்டுகளுக்கு முன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக, கரும்பு அதிக அளவில் பயிரிடப்பட்டது.

கரும்பு உற்பத்தி குறைவு:

கரும்பு உற்பத்தி குறைவு:

ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக, பருவமழை குறைவு, தண்ணீர் பற்றாக்குறை, விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை, கரும்பை வெட்டி எடுப்பதற்கு ஆட்கள் கிடைக்காதது போன்ற காரணங்களால் கரும்பு உற்பத்தி குறைந்தது.

3500 ஏக்கரில் கரும்பு:

3500 ஏக்கரில் கரும்பு:

இந்த ஆண்டு மட்டும் காஞ்சிபுரத்தில் சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டு உள்ளது.

கருகும் கரும்பு பயிர்:

கருகும் கரும்பு பயிர்:

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, கிணற்றில் போதிய நீரூற்று இல்லாததால், கரும்புக்கு நீர் பாய்ச்ச முடியாமல் கருகி வருகிறது.

கடனாளியான விவசாயிகள்:

கடனாளியான விவசாயிகள்:

வங்கிக்கடன் வாங்கி, பயிர் செய்துள்ள விவசாயிகள் கரும்பு காய்ந்து வருவதால், கடனாளியாக மாறும் நிலை உருவாகியுள்ளது.

கிணற்றை ஆழப்படுத்த கடனுதவி:

கிணற்றை ஆழப்படுத்த கடனுதவி:

எனவே, கரும்பு பயிரை காக்க, கிணற்றை ஆழப்படுத்துவதற்காக வங்கிகள் மூலம் கடனுதவி செய்ய அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

English summary
Kanchipuram district was famous for Sugar cane. Nowadays sugar canes destroyed because of water reduction.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X