For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”பிரச்சினைகளுக்கு தீர்வு தற்கொலை அல்ல”- மென் திறன் பயிற்றுனர் கிருஷ்ணா சுரேஷ்

Google Oneindia Tamil News

-கிருஷ்ணா சுரேஷ்

சென்னை: எல்லா பிரச்சினைகளுக்கும் தற்கொலை என்றுமே தீர்வாகாது என்று மாணவர்களுக்கான மென் திறன் பயிற்சியாளரான கிருஷ்ணா சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் "பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக சிலர் வாழ்க்கையே முடித்து கொள்கிறார்கள்.இதற்கு கரணம் மன அழுத்தமா? நொடி நேர தடுமாற்றமா? அல்லது அளவுக்கு அதிகமான சுயமரியாதையா என்று பல காரணங்கள் இருக்கலாம்.

இதுபோல தற்கொலைக்கு முயற்சிப்பவர்களில் ,விவசாயிகள், அரசு உழியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்குவர்.கடந்த மூண்டு ஆண்டுகளில் 3000 திற்கும் மேல் மக்கள் தற்கொலை செய்துகொண்டதாக பத்திரிகை செய்தி குறிப்பிடுகிறது.

தற்கொலை முடிவு:

தற்கொலை முடிவு:

இதற்கு காரணம் வறுமை ,குடும்ப பிரச்சனை,மழை இன்மை மற்றும் வறட்சியினால் விளைச்சல் குறைந்து கடன் சேருதல்,உடல் நல பாதிப்பினால் தற்கொலைக்கு முடிவு எடுக்கிறார்கள் .

இளைஞர்கள் அதிகம்:

இளைஞர்கள் அதிகம்:

WHO வெளியிட்டுள்ள செய்தியின்படி இந்தியாவில் இளம் வயதினர் குறிப்பாக 15 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர் தற்கொலை அதிகம் செய்து கொள்வதாகவும், இந்தியாவின் தற்கொலை விகிதம் உலக அளவில் மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களை நீங்களே நேசியுங்கள்:

உங்களை நீங்களே நேசியுங்கள்:

இது ஒரு புறம் இருக்க மாணர்வர்கள் தங்களையே வருத்தி கொண்டு உயிரை மாய்த்து கொள்வது, நியாயமற்ற செயல்.

மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் போட்டி மனப்பாங்கு , மன உளைச்சல்,பண பிரச்சனை மற்றும் பாலியல் ரீதியான நெருக்கடிகள் ஆகும். மாணவர்களுக்கு பல விதமான இன்னல்கள் ஏற்படுவது இயல்பு.அதை எதிர்நோக்கி வெற்றி கொள்வதே சிறப்பு.

சிறு பிரச்சினைகளுக்கு கூட:

சிறு பிரச்சினைகளுக்கு கூட:

"வாழ்க்கை என்பது ரோஜாக்களால் நிரப்பப்பட்ட மெத்தை அல்ல முட்களும் அல்ல " .இன்றைய இளைஞர்கள் பிரச்சனை என்பது அவர்களுக்கு மட்டும் தான் என்று தவறாக நினைக்கிறார்கள். ஆனால் அதிக தன்மானம் கருதுபவர்கள் சிறு பிரச்சினையை எதிர்கொள்ளும்போதும், கூடஇருப்பவர்களால் பாதிப்பு ஏற்படும்போதும் தாங்க முடியாமல் தற்கொலை முடிவுக்கு செல்கிறார்கள்.

பாதிக்கும் சறுக்கல்கள்:

பாதிக்கும் சறுக்கல்கள்:

தன்னையே எப்பொழுதும் உயர்வாக நினைக்கும் மனோ பாவம் உள்ளவர்கள் இந்த குறையை நெருங்கிய நண்பருக்கு கூட எளிதில் வெளி காட்டி கொள்வதில்லை.ஒரு சிறு சறுக்கல் கூட அவர்களை பெரிதும் பாதித்து விடுகிறது.

மன அழுத்தம் அதிகரிக்கும்:

மன அழுத்தம் அதிகரிக்கும்:

நாம் எல்லோரும் ஒன்றை மனத்தில் பதித்து கொள்ளவேண்டும், மாற்றம் தவிர்க்க முடியாதது.இன்று மிக கடினமாக தெரியும் ஒரு காரியமோ ஒரு சூழலோ நாளை அது எளிதாக முடியம் வாய்ப்பு இருக்கிறது.இன்று நமக்கு வாய்க்கப்பட்ட சூழலை நினைத்து நொந்து போகிறவர்கள் மன வருத்தப்பட தேவை இல்லை,வருத்தப்பட்டால் இந்த வருத்தம் அவர்களை மன அழுத்தத்தில் தள்ளிவிடும் என்பது நிதர்சன உண்மை.

மகிழ்ச்சியாக வாழுங்கள்:

மகிழ்ச்சியாக வாழுங்கள்:

தினமும் காலையில் பிரார்த்தனை செய்தல், தியானம், உடற் பயிற்சி,மூச்சு பயிற்சி,நடை பயிற்சி செய்தல் ஆகியவை உங்களை மன அழுத்ததிலிருந்து விடுபட செய்யகூடிய காரணியாகவும், வாழ்க்கைப் படகை நிலைநிறுத்தும் நங்கூரமாகவும் விளங்கும்.எனவே மேற்படி அறிவுரைகளின் படி நடந்து நீங்கள் மகிழ்ச்சியோடு இருப்பது மட்டும் அல்லாமல் இந்த பூமிப் பந்தையும் மகிழ்ச்சியாக வைத்திருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
soft skill trainer Krishna suresh NLP says that suicide is not an end for anything including life.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X