For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இமாசல பிரதேசம் முதல் கன்னியாகுமரி வரை அனல் வீசும் - வானிலை மையம் எச்சரிக்கை

இந்த ஆண்டு முன்னதாகவே கோடை காலம் தொடங்கும் எனவும் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் வழக்கத்தை விட 1.5 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோடை காலம் முன்கூட்டியே தொடங்கும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

கடந்த இரு ஆண்டுகளாகவே கோடை காலத்தில், வெப்பம் கொளுத்தியது. ஆந்திரா, தெலுங்கானாவில் சாலைகளிலும், மொட்டைமாடிகளிலும் ஆம்லெட் போட்டனர். 115 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது.

இந்த ஆண்டும் கோடை காலத்தில் வழக்கமான அளவை காட்டிலும் கூடுதலாக வெயிலின் தாக்கம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

வெயிலோடு விளையாடும் காலம்

வெயிலோடு விளையாடும் காலம்

வடகிழக்குப் மழையும், பனிகாலமும் முடிந்து கோடை தொடங்கப் போகிறது. பிப்ரவரி மாதத்தின் கடைசியிலேயே வெயில் தகித்தது. 30 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை அதாவது 90 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. மாா்ச் மாதம் முதல் தென்னிந்திய மாநிலங்களில் வெப்ப நிலையின் தாக்கம் படிப்படியாக உயரத் தொடங்கும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கும் வானிலை மையம்

எச்சரிக்கும் வானிலை மையம்

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வழக்கமான அளவை விட இந்த ஆண்டு அதிகபட்சமாக 5 டிகிாி செல்சியஸ் வரை வெப்பம் கூடுதலாக பதிவாகும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

வட இந்தியாவில் வெப்பம்

வட இந்தியாவில் வெப்பம்

மலைப் பிரதேசங்களான இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் வழக்கமான அளவை விட 3 டிகிாி செல்சியஸ் வரை வெப்பம் நிலவலாம். டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள ஹாியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிங்களில் வழக்கத்தை விட 1 டிகிாி செல்சியஸ் அளவில் கூடுதலாக வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

அனல் காற்று வீசுமே

அனல் காற்று வீசுமே

உலக வெப்பமயமாதலின் காரணமாக மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் டெல்லி உட்பட 16 மாநிலங்களில் வழக்கத்தை விட 1.5 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அதிகரித்துக் காணப்படும் எனவும் வெப்ப அலை வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட இந்தியாவிலும் வெயில்

வட இந்தியாவிலும் வெயில்

வெப்ப அலை வீசும் இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 52 டிகிரி செல்சியஸ் (125.6 பாரன்ஹீட்)வரை சுட்டெரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் அதிக பாதிப்புக்கு ஆளாகுமாம்.

கொளுத்தும் கோடை

கொளுத்தும் கோடை

ஒரிசா மற்றும் தெலுங்கானா மற்றும் மத்திய மகாராஷ்டிரா மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்த கோடையில் அதிக அளவு பாதிப்பிற்கு உள்ளாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளாவைப் பொறுத்தவரை 5 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அதிகரித்து காணப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

வெயில் ஹீட் காற்று ஜில்

வெயில் ஹீட் காற்று ஜில்

சென்னையில் இன்றைய தினம் 89 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சூரியன் சுட்டெரித்தாலும் கடற்காற்று வீசுவதால் ஜில் ஜில் காற்று வீசுவதால் வெப்பத்தின் தாக்கம் தெரியவில்லை. வேலூரில் 96.8 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. திருச்சி, மதுரையில் 93.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

English summary
Summer seems to arrived early across India with maximum temperatures already hovering around 2-5 degrees Celsius above normal in many parts of the country on February 28 the day the IMD picked to predict an intense summer across India, implying a greater threat to human and crop health.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X