For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏப்ரல் 5-ம் தேதி முதல் சென்னை - செங்கோட்டை கோடை கால சிறப்பு ரயில்

Google Oneindia Tamil News

செங்கோட்டை: சென்னையில் இருந்து செங்கோட்டைக்கும் செங்கோட்டையிலிருந்து சென்னைக்கும் வாரம் ஒரு முறை கோடை கால சிறப்பு கட்டண எக்ஸ்பிரஸ் ரயில் ஏப்ரல் மாதம் 5ம் தேதி முதல் ஜூன் மாதம் 29 ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் சார்பில் அதன் செயலர் கே .எச்.கிருஷ்ணன் மற்றும் பொருளாளர் .எஸ்.சுந்தரம் உள்ளிட்டோர் ரயில்வே அமைச்சகத்தின் ரயில்வே பயணிகள் மேம்பாட்டுக் குழுவின் குழு உறுப்பினர் ஆசீர்வாதம் ஆசாரியை நேரில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

summer special train oprate between chennai- sengottai

அதில் செங்கோட்டை, தென்காசி வட்டார ரயில் பணிகள், செங்கோட்டை புனலூர் அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடித்தல், செங்கோட்டை வழி இயக்கப்பட வேண்டிய புது ரயில்கள், செங்கோட்டை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பயணிகள் நலப்பணிகள், செங்கோட்டை விருதுநகர் மற்றும் தென்காசி திருநெல்வேலி வழித்தடங்களை மின்மயமாக்குதல், செங்கோட்டைக்கு சென்னையில் இருந்து கோடை கால சிறப்பு ரயில்களை இயக்குதல், செங்கோட்டையில் பிட் லைன் வசதி ஏற்படுத்துதல், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டதில் அவரது இடைவிடா முயற்சியால் தற்போது சென்னையில் இருந்து செங்கோட்டைக்கும் செங்கோட்டையிலிருந்து சென்னைக்கும் வாரம் ஒரு முறை கோடை கால சிறப்பு கட்டண எக்ஸ்பிரஸ் ரயில் ஏப்ரல் மாதம் 5ம் தேதி முதல் ஜூன் மாதம் 29 ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

சென்னையில் இருந்து ஏப்ரல் 5 ஆம் தேதி புதன்கிழமை முதல் ஜூன் 28ம் தேதி வரை ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 9.05 க்கு புறப்பட்டு மறுநாள் வியாழன் காலை 10 .15 மணிக்கு செங்கோட்டைக்கு வந்து சேரும். அதே போல் செங்கோட்டையில் இருந்து ஏப்ரல் 6ம் தேதி வியாழன் முதல் ஜூன் 29ம் தேதி வரை ஒவ்வொரு வியாழக்கிழமை பகல் 2.20 க்கு புறப்பட்டு மறுநாள் வெள்ளி அதிகாலை 3.45 க்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் ரயில் மட்டுமே மாம்பலம் ரயில் நிலையத்திலும் நிற்கும். இரு வழிகளிலும் இந்த ரயில்கள் நிற்கும் நிலையங்கள் தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம்.வழியே செல்கிறது.

இந்த ரயில்களின் கட்டணம் தக்கல் கட்டணமாகும். மூத்த குடிமக்கள் மற்றும் இதர சலுகை கட்டணங்களில் இந்த ரயில்களில் டிக்கட் முன் பதிவு செய்ய இயலாது.சென்னை செங்கோட்டை ரயில் எண் -- 06003. செங்கோட்டை சென்னை ரயில் எண் -- 06004 .ஒரு இரண்டு அடுக்கு தூங்கும் வசதி A C பெட்டி, இரண்டு மூன்றடுக்கு தூங்கும் வசதி AC பெட்டி, 12 சாதாரண தூங்கும் வசதி மூன்றடுக்கு பெட்டிகள்,இரண்டு சாதாரண முன்பதிவில்லா மற்றும் லக்கேஜ் பெட்டிகள் ஆக மொத்தம் 17 பெட்டிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த ரயிலை பொதுமக்கள் பயன்படுத்தி மேலும் நிரந்தர ரயிலாக இந்த ரயில் இயக்க ஊக்கம் அளிக்க ரயில் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
summer special train will oprate between chennai- sengottai begin april 5th
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X