For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ம்ம்ம்... பிரியாணி சாப்பிடலாமா பிரண்ட்ஸ்??!

Google Oneindia Tamil News

சென்னை: எல்லோருக்கும் ஹேப்பி சன்டே. சாப்பாடு களை கட்டியிருக்கும் வீடுகளில். ஞாயிறு என்றாலே அசைவம் என்பது 90 சதவீத வீடுகளில் எழுதப்படாத சட்டம்.

வறுவல் முதல் பிரியாணி வரை வளைத்து வளைத்து அசைவ உணவுகள் இன்று களை கட்டும். புரட்டாசி மாதம் என்றாலும் கூட இப்போதெல்லாம் பல வீடுகளில் நான் வெஜ் சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. அதிலும் பிரியாணி என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.. அட நம்ம தல அஜீத்துக்கு பிடிச்ச உணவும் பிரியாணிதான்..!

Sunday Special food Briyani

சரி அதை விடுங்க.. பிரியாணியின் கதையைப் பார்ப்போமா...!

கம கமக்கும் பிரியாணியின் சுவையான வரலாறு

நம்மில் பலருக்கு பிரியாணி என்று கூறினாலே நாவில் எச்சில் ஊரும். மூன்று வேளை பிரியாணி குடுத்தாலும் வயிறு முட்ட தின்போம். நம் உயிரினும் மேலாக நாம் நினைக்கும் பிரியாணியின் வரலாற்றை தெரிந்து கொள்வோம்.

Sunday Special food Briyani

பிரியாணி என்பது பெர்சிய (persia) மொழியில் பிரின் (birin) என்ற வார்த்தையில் இருந்து பெறப்பட்டது. இதற்கு "சமைப்பதற்கு முன் பொறிக்க பட்டது
" என்ற அர்த்தம் உண்டு. நம் நாட்டிற்குள் பிரியாணி வந்த கதையை பார்ப்போம்.

துருக்கிய-மங்கோலியா வெற்றிவீரன் திமிர் (timir) என்பவரால் 1938 ஆம் ஆண்டு இந்திய எல்லைக்குள் பிரியாணி கொண்டு வரப்பட்டது. மண் பானையில் அரிசி,மசாலா பொருட்கள் , இறைச்சி யை சேர்த்து சூடான குழியில் புதைத்து விடுவார்களாம். உணவு தயார் ஆனதும் அந்த மண் குழியில் இருந்து எடுத்து timir இன் ராணுவ படையினருக்கு உணவாக அளிக்கப் பட்டது என்று நம்பப்படுகிறது.

அரேபிய வர்தகர்களால் மலபார் கடற்கரை பகுதிகளில் பிரியாணி கொண்டு வரப்பட்டது. தமிழ் இலக்கியங்களில் அரிசி, நெய், இறைச்சி, மஞ்சள் தூள், தனியா தூள் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் ஊன் சோறு (Oon Soru) பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Sunday Special food Briyani

முகலாய வீரர்கள் நலிவுற்றிருந்ததை கண்ட மும்தாஜ், தம் படையினருக்கு போஷாக்கான உணவளிக்க திட்டமிட்டார். முடிவு பிரியாணி உருவானது. நெய்யில் வறுக்கப்பட்ட அரிசி நறுமணமுள்ள மசாலாக்கள் மற்றும் இறைச்சியுடன் சேர்ந்து கம கமக்கும் பிரியாணி தயார் செய்யப்பட்டது .

ஹைதராபாத் நிஜாம் மன்னர்கள் மற்றும் லக்னோவின் நவாப்கள் தங்களது நுட்பமான நுணுக்கங்களை தங்களது பிரியாணிக்கும் கொண்டு வந்து பெருமை பெற்றனர்.

வெறும் பிரியாணி சாப்பிட்ட காலம் மலையேறி பல காலமாகி விட்டது. இப்போதெல்லாம் விதம் விதமான டேஸ்ட்டில், விதம் விதமான முறைகளில், விதம் விதமான பெயர்களில் பல்வேறு வகை பிரியாணிகள் வலம் வருகின்றன.

  • முகலாய (Mughalai) பிரியாணி
  • ஹைதிராபாதி (hyderabadi) பிரியாணி
  • கல்கத்தா (Calcutta) பிரியாணி
  • திண்டுக்கல் (Dindigul) பிரியாணி
  • ஆம்பூர் (Ambur) பிரியாணி
  • ஆற்காடு (Arcot) பிரியாணி
  • தலசேரி (Thalaserry) பிரியாணி
  • பாம்பே (Bombay ) பிரியாணி
  • லக்னோ (Lucknowi) பிரியாணி
  • சிந்தி (Sindhi) பிரியாணி

சில பேர் சொல்வார்கள், சிக்கன் பிரியாணி சூடு என்று.. அப்படி இல்லைங்க.. சிக்கன் பிரியாணியில் நன்மைகள் நிறைய உள்ளன.

Sunday Special food Briyani

சிக்கனில் புரதம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. அரிசியில் கார்போஹைட்ரேட், எண்ணெய் மற்றும் நெய்யில் கொழுப்பு, இஞ்சி மற்றும் மஞ்சள் செரிமானத்திற்கு நன்கு உதவும். பிரியாணியில் சேர்க்கும் மசாலாவும், இறைச்சியும் நமக்கு நிறைய நன்மைகளை அளிக்கிறது.

நீங்க சென்னைவாசியா.. அப்படின்னா இந்தக் கடைகளுக்கு மறக்காம ஒரு ரவுண்டு போய்ருங்க.. செமையான பிரியாணி இங்கு கிடைக்கும்..

  • RAMAA's Hyderabadi Biriyani - Saligramam
  • Malabar Biriyani - Vadapalani
  • Ambur Star Biriyani
  • Thalassery Corner Thattukadai
  • Kalyana bhavan biryani - Egmore
  • Charminar Biriyani
  • Sukkubhai Biriyani
  • Thanjavur Military Hotel
  • Ya mohideen

2017ம் ஆண்டு Swiggy வெளியிட்ட ஒரு ரிப்போர்ட்டில், இந்தியர்களால் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணி No 1 இடத்தை
பிடித்திருக்கிறதாம்.

பிறகென்ன.. ஹேப்பி சன்டே.. ஹேப்பி பிரியாணி ஈட்டிங்!

- லாவண்யா

English summary
Sunday is always famous and special for Non Veg foods, that too Briyani is the very special food we eat on the Holidays. Here is one round up from Lavanya.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X