For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈபிஎஸ் அணியுடன் சேர வேண்டாம் என்பதே தொண்டர்களின் கருத்து... செம்மலை அதிரடி

எடப்பாடி அணியுடன் சேர வேண்டாம் என்பதே தொண்டர்களின் கருத்தாக உள்ளது என எம்எல்ஏ செம்மலை தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சேலம்: எடப்பாடி அணியுடன் சேர வேண்டாம் என்பதே தொண்டர்களின் கருத்தாக உள்ளது என எம்எல்ஏ செம்மலை தெரிவித்துள்ளார். 2 நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த சுமூகமான சூழல் ஏற்படும் என்றும் எம்எல்ஏ செம்மலை கூறினார்.

அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உகந்த சூழல் உருவாகியுள்ளதாக இரு கோஷ்டிகளும் கூறிவந்தன. இதனால் பேச்சு வார்த்தை இன்று நடைபெறும் நாளை நடைபெறும் என ஒருவாரமாக எதிர்ப்பாக்கப்பட்டது.

இந்நிலையில் சேலத்தில் ஓபிஎஸ் ஆதவாளர்களின் பேச்சுவார்த்தைக்கு பின் எம்எல்ஏ செம்மலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது எடப்பாடி அணியுடன் சேர வேண்டாம் என்பதே தொண்டர்களின் கருத்தாக உள்ளது என்று அவர் கூறினார்.

ஈபிஎஸ் அணி தயார் இல்லை

ஈபிஎஸ் அணி தயார் இல்லை

பேச்சுவார்த்தைக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் செம்மலை எம்எல்ஏ குற்றம்சாட்டினார். தங்களது கோரிக்கைகளை ஏற்று பேச்சுவார்த்தை நடத்த ஈபிஎஸ் தலைமையிலாலன அணி தயாராக இல்லை என்றும் அவர் கூறீனார்

கோரிக்கையை ஏற்றால் மட்டும்

கோரிக்கையை ஏற்றால் மட்டும்

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரைத்தாலே போதும் என்றும் எம்எல்ஏ செம்மலை தெரிவித்தார். மேலும் தங்கள் அணி விதித்த கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த சுமூகமான சூழல் அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

இணைய வேண்டாம்-தீர்மானம்

இணைய வேண்டாம்-தீர்மானம்

சட்டசபை தலைமையை விட மக்களின் மனநிலையை முக்கியமியம் என்றும் எம்எல்ஏ செம்மலை கூறினார். கூட்டத்தில் ஈபிஎஸ் அணியுடன் இணைய வேண்டாம் என தீர்மானம் நிறைதவேற்றப்பட்டதாக அவர் கூறினார்.

ஓபிஎஸிடம் தெரிவிப்போம்

ஓபிஎஸிடம் தெரிவிப்போம்

தொண்டர்களின் எண்ணத்தை தீர்மானம் மூலம் நிறைவேற்றயுள்ளோம் என்றும் செம்மலை கூறினார். தொண்டர்களின் எண்ணத்தை அணியின் தலைமையான ஓபிஎஸிடம் தெரிவிப்போம் என்றும் செம்மலை திட்டவட்டமாக தெரிவவித்தார்.

அறிகுறியே இல்லை

அறிகுறியே இல்லை

ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகியான செம்மலையின் இந்த பேச்சும், வட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பது போன்று தெரியவில்லை. இனி ஈபிஎஸ் அணி இறங்கி வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கான அறிகுறிகள் உண்டாகும் என தெரிகிறது.

English summary
MLA Semmalai met press in Salem after the supporters meeting. He said Supporters doesnt want to join with EPS team.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X