For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் மத்திய அமைச்சராவேன்: விஜய்காந்த் மச்சான் சுதீஷ்

By Mayura Akilan
|

சேலம்: சேலத்தில் நானும், தர்மபுரியில் அன்புமணியும் வெற்றிபெற்று அமைச்சராவது உறுதி என்று சேலம் தொகுதியின் தேமுதிக வேட்பாளர் சுதீஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், சேலம் லோக்சபா தொகுதி வேட்பாளராக தேமுதிகவை சேர்ந்த சுதீஷ் போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் சேலம் வந்து கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜ, பாமக, மதிமுக, ஐஜேகே, கொமதேக ஆகிய கட்சிக ளின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இவர் நேற்று பாமக நிர்வாகிகளுடனான சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது வேட்பாளர் சுதீஷ் பேசுகையில், ஏற்கனவே சேலம் அறிமுகமான பகுதி என்பதால் நான் இங்கு பாஜக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுவதை பெருமையாகவும், கவுரவமாகவும் கருதுகிறேன்.

வலுவான கூட்டணி

வலுவான கூட்டணி

பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக சேரக் கூடாது என மற்ற கட்சியினர் கருதினர். ஆனால், நானும், அன்புமணி ராமதாசும் இக்கூட்டணியில் தான் சேர வேண்டும் என நினைத்தோம். தற்போது சேர்ந்து விட்டோம். இக்கூட்டணி வலுவாக உள்ளது.

320 தொகுதிகள் ஜெயிக்கும்

320 தொகுதிகள் ஜெயிக்கும்

தமிழ்நாட்டில் 2016ல் தேமுதிகவும், பாமகவும் மட்டும்தான் வலுவான கட்சிகளாக இருக்கும். மற்ற கட்சிகள் பின்னுக்கு தள்ளப்படும். இந்தியாவில் 320 தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றும். இதனால் மோடி பிரதமராவது உறுதி. மற்ற கட்சிகள் வெற்றி பெற்றால் செல்லாக்காசுகளாகத்தான் இருக்கும்.

அமைச்சராவது உறுதி

அமைச்சராவது உறுதி

தேர்தலில் நானும், அன்புமணியும் வெற்றி பெற்று அமைச்சராவது உறுதி. அதற்காக நீங்கள் எனக்கு ஆதரவு தாருங்கள். சேலத்தை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் என்றார். இந்த தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

அருள் ஆதரவு இல்லையே…

அருள் ஆதரவு இல்லையே…

பாமக சார்பில் முன்பு சேலம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த மாநில இளைஞர் அணி செயலாளர் அருளை சந்திப்பதற்காக அஸ்தம்பட்டி அருண்நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சுதீஷ் சென்றார். அங்கு அருளை சந்திக்கமுடியாததால் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர், அருளின் மனைவி கல்பனாவி டம் ஆதரவு கோரினார்.

புறக்கணித்த அருள்

புறக்கணித்த அருள்

பாமக நிர்வாகிகளுடன் சுதீஷ் நடத்திய ஆலோசனை கூட்டத்திலும் அருள் பங்கேற்கவில்லை. இதனால் தேமுதிக, பாமகவினரிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
LK Sutheesh has hoped that he and Anbumani Ramadoss will win in the LS elections
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X