For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News: இன்றைய முக்கிய செய்திகள் - ஹைலைட்ஸ்!

பெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசிய விவகாரத்தில் எஸ்வி சேகர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: பெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசிய விவகாரத்தில் எஸ்வி சேகர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் பாஜக நிர்வாகி எஸ்வி சேகர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதனிடையே இந்த விவகாரத்தில் எஸ்வி சேகர் முன்ஜாமீன் பெற முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் படிக்க...

SV Shekar reported to arrest at any time - Live updates

கடல் சீற்றம்

தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு கடல் அதிக சீற்றத்துடன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளார். கடல் அலை நெருங்கிய இடைவெளியில் 3 மீட்டர் உயரத்திற்கு எழும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடற்பகுதிகளில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

கள்ள நோட்டு

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பின் கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிந்தைய நிதியாண்டில், கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கமும், சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றமும் அதிகரித்துள்ளது. மேலும் படிக்க...

சிகிச்சை விவரம்

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்கள் அடங்கிய 1000 பக்கங்கள் கொண்ட மருத்துவ ஆவணங்கள் சசிகலா வக்கீல்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

Newest First Oldest First
6:14 PM, 21 Apr

பெண் பத்திரிகையாளர்கள் காலில் விழுந்து எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்க வேண்டும்: பாரதிராஜா
5:12 PM, 21 Apr

அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது
5:12 PM, 21 Apr

பொருளாதார குற்ற வழக்குகளில் தப்பியோடியவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யலாம்
4:56 PM, 21 Apr

சந்தானத்திடம் பேராசிரியர்கள் சண்முகராஜா, பாரி பரமேஸ்வரன், ஜெயசந்திரன்
4:55 PM, 21 Apr

பேராசிரியர் நிர்மலா தேவி மீது மதுரை பல்கலை பேராசிரியர்கள் 3 பேர் புகார்
3:58 PM, 21 Apr

2 குழுக்களாக பிரிந்து சிபிசிஐடி போலீசார் சோதனை
3:58 PM, 21 Apr

நிர்மலா தேவி வீட்டில் சிபிசிஐடி போலீஸ் சோதனை
3:38 PM, 21 Apr

அதிமுக ஆட்சிமன்றக் குழு முடிவின்படி வேட்பாளர்களை அறிவித்துள்ளனர் ஓபிஎஸ், ஈபிஎஸ்
3:37 PM, 21 Apr

காந்தி நகரில் யுவராஜ், ஹனூரில் விஷ்ணுகுமார், தங்கவயலில் அன்பு போட்டி
3:37 PM, 21 Apr

காந்திநகர், ஹனூர், தங்கவயல் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு
3:37 PM, 21 Apr

தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
3:37 PM, 21 Apr

கர்நாடக சட்டசபை தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது அதிமுக
2:30 PM, 21 Apr

அவசர சட்டத்திற்கு மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய கேபினட் கூட்டத்தில் ஒப்புதல்
2:16 PM, 21 Apr

சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை முடிவு
1:46 PM, 21 Apr

மோடி ஆட்சியில் பலதுறைகளில் நாடு பின்தங்கிவிட்டதாக கருத்து கூறியவர் யஷ்வந்த் சின்ஹா
1:45 PM, 21 Apr

பாஜகவில் எல்லா தொடர்புகளையும் முறித்து கொள்வதாக யஷ்வந்த் பேச்சு
1:45 PM, 21 Apr

வேறு எந்த அரசியல் கட்சியிலும் சேரமாட்டேன் என பேட்டி
1:45 PM, 21 Apr

பிரதமர் பதவிக்கு மோடி வந்ததை கடுமையாக எதிர்த்தவர் சின்ஹா
1:39 PM, 21 Apr

முன்னாள் நிதி அமைச்சராக இருந்தவர் யஷ்வந்த் சின்ஹா
1:39 PM, 21 Apr

பாஜகவில் இருந்து விலகினார் யஷ்வந்த் சின்ஹா ராஜினாமா
1:03 PM, 21 Apr

நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தப்படும்: விசாரணை அதிகாரி சந்தானம் பேட்டி
1:03 PM, 21 Apr

கருணை கொலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்த நிலையில் யானை மரணம்
1:02 PM, 21 Apr

சேலம் அருகே நோயுற்றிருந்த சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரி மரணம்
12:37 PM, 21 Apr

தனிமனித உரிமை மீறப்பட்டால் நடவடிக்கை உறுதி: ஜெயக்குமார்
12:37 PM, 21 Apr

எஸ்.வி.சேகர் மீது புகார் அளித்தால் சட்ட வழி படி நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்
12:09 PM, 21 Apr

கோவையிலும் ரயில் மறியல் நடத்திய மே 17 இயக்கத்தினர், எஸ்டிபிஐ அமைப்பினர் கைது
12:09 PM, 21 Apr

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போக செய்யும் செயலுக்கு கண்டனம்
12:09 PM, 21 Apr

மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன்காந்தி உள்பட 100 பேர் கைது
12:09 PM, 21 Apr

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம்
11:57 AM, 21 Apr

பாஜகவினர் தரம் தாழ்ந்த அரசியல் செய்கின்றனர்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
READ MORE

English summary
Here are the Tamilnadu, India today Flash news. Due to natural changes in Tamil Nadu sea the wave will be rough for two days. Chennai Meteorological center warns fisherman do not enter into sea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X