For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டாலின் முதல்வர் வேட்பாளர்.. பிறகு... பாஜக + திமுக + விஜயகாந்த் கூட்டணி... இது சாமி விருப்பம்!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலினை முன்னிறுத்த வேண்டும். அதேபோல திமுகவுடன் பாஜக கூட்டணி சேர வேண்டும். கூடவே விஜயகாந்தும் அணி சேர வேண்டும் என்று சுப்பிரமணியம் சாமி விருப்பம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் என்று எந்தக் கட்சியுமே அதிகாரப்பூர்வமாக அறிவித்து வேலையில் ஈடுபடுவதில்லை. மாறாக அந்தந்த கட்சிகளின் தலைவர்களையே வேட்பாளர்களாக பாவிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் சமீப காலமாக முதல்வர் வேட்பாளர் என்ற வார்த்தை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் எந்தக் கட்சியும் அப்படி யாரையும் அறிவிப்பது இல்லை.

அதிமுகன்னா ஜெ.. திமுகன்னா கருணாநிதி

அதிமுகன்னா ஜெ.. திமுகன்னா கருணாநிதி

அதிமுக என்றால் ஜெயலலிதாதான் முதல்வர். திமுக என்றால் கருணாநிதிதான் முதல்வர். மதிமுக என்றால் வைகோ என்றுதான் மக்கள் மனதில் பதிந்து போயுள்ளது.

வரலாற்றைத் தகர்த்த பாமக

வரலாற்றைத் தகர்த்த பாமக

இருப்பினும் இந்த முறை பாமக முதல் முறையாக முதல்வர் வேட்பாளரை அறிவித்தது. டாக்டர் ராமதாஸின் மகனும், தர்மபுரி எம்.பியுமான அன்புமணி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சாமி போட்ட டிவிட்

சாமி போட்ட டிவிட்

இந்த நிலையில் சுப்பிரமணியம் சாமி ஒரு டிவிட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

சாமியின் விருப்ப "மனு"

அந்த டிவிட்டில் சாமி என்ன சொல்லியிருக்கிறார் என்றால்... முதல்வர் பதவியை கருணாநிதி நிராகரிப்பார் என நான் நம்புகிறேன். மேலும் அவர் ஸ்டாலினை தலைவராக அறிவிக்க வேண்டும். அது நடந்த பின்னர், பாஜகவும், விஜயகாந்த்தும் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து புதிய அணியை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சாமி.

நினைச்சது நடக்குமா?

நினைச்சது நடக்குமா?

சாமிக்கு ஏன் இந்த திடீர் ஸ்டாலின் பாசம் என்று தெரியவில்லை. ஆனால் சாமி சொல்வது போல, நினைப்பது போல, நம்புவது போல நடக்குமா என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English summary
Senior BJP leader Subramaniam Swamy has said in a tweet that he is hopeful the DMK lerader Karunanidhi will decline to be CM candidate and make Stalin leader. Then hope BJP align Stalin and Vijaykanth in a new alliance, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X