For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெருங்கும் தீபாவளி: விலையேற்றத்தால் ‘கசக்கும்’ இனிப்புகள்

Google Oneindia Tamil News

சென்னை: மூலப் பொருட்கள் விலையுயர்வு, வேலையாட்கள் சம்பள உயர்வு எனக் காரணம் காட்டி இனிப்பு விலைகளை பெருமளவில் உயர்ந்தியுள்ளனர் இனிப்புக்கடை முதலாளிகள்.

தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள் இவை மூன்றும் இன்ரியமையாதவை. ஆனால், இன்னும் தீபாவளிக்கு சரியாக 9 நாட்களே உள்ள நிலையில், கடையில் விற்கபடும் விதவிதமான இனிப்புகளின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி.. தீபாவளி தான்....

தீபாவளி.. தீபாவளி தான்....

முன்காலத்தில் எல்லாம் தீபாவளி மாதிரி பண்டிகை வருகிறதென்றால் பாட்டிமார்கள் வீட்டில் கையாலேயே மாவு அரைத்து அதிரசம், முறுக்கு, சீடை என ஆரோக்கியமான திண்பண்டங்கள் தயாரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

டிவி தீபாவளி....

டிவி தீபாவளி....

ஆனால், இயந்திரமயமாகிப் போன வாழ்க்கையில் இன்று பெரும்பாலும் நகரவாசிகள் பண்டிகைகளின் போது நம்பியிருப்பது இனிப்புக்கடைகளைத் தான். எல்லா ஸ்வீட்டிலும் ஒரு கிலோ வாங்கினோமா, நாமும் சாப்பிட்டு பிரண்ட்ஸ்களுக்கும் கொடுத்தோமா, பண்டிகையன்று ஹாயாக அமர்ந்து டிவி பார்த்தோமா என கழிகிறது அவர்களது திருவிழா நாட்கள்.

30 முதல் 50 சதவீதம் வரை...

30 முதல் 50 சதவீதம் வரை...

இந்நிலையில் இந்தாண்டு இனிப்புகள் சுமார் 30 சதவீதத்திலிருந்து, 50 சதவீதம் வரை விலை கூடியிருப்பது பொதுமக்களை பெரிதும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

நெய் விலை அதிகம்...

நெய் விலை அதிகம்...

நெய் போன்ற மூலப்பொருட்களின் விலை உயர்வே இந்த இனிப்புகளின் விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்கின்றனர் முதலாளிகள். நல்ல தரமான நெய்யைப் பயன் படுத்தினால் மட்டுமே சரியான சுவையை தர இயலும் என்பது இவர்களது வாதம்.

விலையேற்றம்...

விலையேற்றம்...

இதனால், ஒரு கிலோ மைசூர்பாகின் விலை கடந்தாண்உ ரூ180 ஆக இருந்தது, இந்தாண்டு ரூ 470 வரை விற்கப்படுகிறது.

சம்பள உயர்வு...

சம்பள உயர்வு...

அதேபோல், கடந்த வருடம் சமையல் கலைஞர்களின் ஒரு நாள் சம்பளமாக ரூ 800 தரப்பட்டது. ஆனால், இன்றோ நாளொன்றுக்கு ரூ 1200 தரப்படுகிறாது. எனவே, இதுவும் விலையேற்றத்துக்கு முக்கியக் காரணம் என்கின்றனர்.

இரு வேறு தரத்தில்...

இரு வேறு தரத்தில்...

ஆனால், பொதுமக்களின் வசதிக்காக ஒவ்வொரு இனிப்பும் இரு வேறு தரத்தில் தயாரிக்கப் படுகின்றன. உதாரணமாக நெய் மைசூர்பாகு கிலோ ரூ400 க்கு விற்கப்படும் அதேவேளையில் கிலோ ரூ270க்கி விற்கப்படும் மைசூர்பாகுகளும் கிடைக்கத் தான் செய்கின்றன.

எல்லாம் சரிதான்....

எல்லாம் சரிதான்....

விலையேற்றத்தால் இந்த விலைக்கு விற்றால் தான் கட்டுப்படியாகும் என்ற முதலாளிகளின் வாதம் சரியாகவே இருந்தாலும், நடுத்தர மக்களின் பண்டிகைக் கொண்டாட்டங்கள் இந்த விலையேற்றத்தால் கசப்பாகி விடக்கூடாது.

English summary
Sweets and savouries may taste better this Diwali if you forget the price tag. Most shops and caterers have raised prices by 30-50% citing inflation and higher labour costs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X