For Daily Alerts
Just In
சுவிஸ் அரசு வெளியிட்ட கருப்பு பண பதுக்கல்காரர்கள் பட்டியலில் இந்திய மாமியார்-மருமகள்!
சென்னை:சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ள 40 பேர் கொண்ட கருப்பு பண பதுக்கல்காரர்கள் பட்டியலில் ஸ்னே லதா மற்றும் சங்கிதா சானே ஆகியோர் இந்திய பெண்கள் ஆவர்.
சானே டையர்ஸ் மேலாண் இயக்குநர் பூசன் லாலின் மனைவி தான் ஸ்னே லதா. கணவருடன் சேந்து ஜாயிண்ட் அக்கவுண்ட் வைத்துள்ளார். 1970ல் இந்த அக்கவுண்ட் தொடங்கப்பட்டுள்ளது.

அதே போல ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் இப்போதைய டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் 2012ம் ஆண்டிலேயே வெளியிட்ட கருப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த பெயர் பிரவீன் சானே. அவரது மனைவிதான் இந்த சங்கீதா.
பிரவீனின் தந்தை பூஷன். பிரவீனின் தாயார் தான் ஸ்னே லதா. அதாவது ஸ்னே லதாவின் மருமகள்தான் இந்த சங்கீதா. இவர்கள் அனைவரும் டெல்லியில் வசிக்கின்றனர்.