For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆமாம் விஜய் சொன்னது சரிதான்.. ஊழல் தலைவிரித்தாடுகிறது.. டி.ஆர். ஆவேசம்

Google Oneindia Tamil News

சென்னை: நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று நடிகர் விஜய் கூறியது சரிதான் என்று டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியபோது ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று கூறியதோடு ஒரு சர்கார் எப்படி இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இவரது பேச்சு அனல்பறந்தது. இந்நிலையில் டி.ஆர். ராஜேந்தரின் பிறந்தநாளான இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் விஜய் சொன்ன மாதிரி நாட்டில் ஊழல், லஞ்சம் இல்லை என நீங்கள் நினைக்கிறீர்களா.

தனியாக நின்று தேர்தலில் ஜெயிக்க முடியுமா

தனியாக நின்று தேர்தலில் ஜெயிக்க முடியுமா

அவர் சொன்னது சரி. நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. தலையும் பூவும் சேர்ந்தால்தான் நாணயம் செல்லும். தலைமை சரியில்லாத எந்த ஆட்சியும் செல்லாது. ஈபிஎஸ்- ஓபிஎஸ் எல்லாம் இன்று தனியாக நின்று தேர்தலில் ஜெயிக்க முடியுமா.

சிம்புவுக்கு மன்றங்கள்

சிம்புவுக்கு மன்றங்கள்

எல்லாம் அம்மா வாங்கி வச்ச ஓட்டை வைத்து கொண்டு இவர்கள் ஏதேதோ செய்கிறார்கள். சினிமாக்காரர்களை விட ஈபிஎஸ், ஓபிஎஸ், அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு சொத்துகள் ஜாஸ்தி. வருமான வரி ரெய்டு வந்தாலும் அந்த பணம் எங்கே போகிறது என தெரியவில்லை. விஜய்க்கு இன்று தமிழகத்தில் மன்றங்கள் அதிகம். இதற்கு அடுத்து தமிழகத்தில் சிலம்பரசனுக்குத்தான் மன்றங்கள் அதிகம். உடனே சிம்புவுக்கு மன்றங்கள் இல்லைனு சொன்னா சொல்லிக்கோங்க.

ஓட்டு வாங்க முடியும்

ஓட்டு வாங்க முடியும்

நாங்கள் ஆட்சிக்கு வருகிறோமோ இல்லையோ, ஆனால் நாங்கள் நினைக்கிறவர்கள்தான் ஆட்சிக்கு வர முடியும் என்ற நிலையை உருவாகும். டி ராஜேந்தருக்கு என தனி இடம் தாய்மார்களிடம் உள்ளது. எனவே அவர்களிடம் என்னால் ஓட்டு வாங்கிட முடியும்.

பொறுமையாக இருந்தேன்

பொறுமையாக இருந்தேன்

டி ராஜேந்தர் மைக்கை கூட தொட்டு பேசுவேன். ஆனால் கதாநாயகிகளை தொட்டு பேச மாட்டேன். எப்படி மைக்கை பிடிக்கனும், எப்படி வோட்டு வாங்கனும் என்று எல்லாம் எனக்கு தெரியும். தலைவர் கருணாநிதி உயிரோடு இருந்ததால் தலை இருக்கும் போது வால் ஆட கூடாது என்று பொறுமையாக இருந்தேன்.

புதிய சாப்டர்

புதிய சாப்டர்

ஆகஸ்ட் 7-ஆம் தேதியுடன் பழைய சாப்டர் ஓவர். அதன்பிறகு புது சேப்டரில் நான் என்ன செய்ய போகிறேன் என்பதை சொல்ல மாட்டேன். செய்து காண்பிக்கிறேன். தனி மனித ஒழுக்கம் தேவை என்றார்.

English summary
T.Rajendar says that Vijay's statement on corruption is true. After Vijay, Simbu is here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X