For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ. 6,000-த்தில் ஒரு பள்ளி மாணவியின் வாழ்க்கையையே மாற்றலாம் தெரியுமா?

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: அம்மடா அறக்கட்டளை கிவ்ஹெர்5(GiveHer5) என்ற புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.

இந்தியாவில் இருக்கும் 600 மில்லியன் பெண்களில் 400 மில்லியன் பேர் மாதவிடாயால் மாதாமாதம் பள்ளி, கல்லூரி அல்லது வேலைக்கு செல்ல சிரமப்படுகிறார்கள்.

இந்தியாவில் 80 சதவீதம் பெண்களால் சானிடரி நாப்கின் வாங்க முடியாத நிலை. இதனால் மாதவிடாய் காலத்தில் சிறுமிகள் பள்ளிகளுக்கு செல்லாமல் அந்த 5 நாட்கள் வீட்டில் முடங்கியுள்ளனர்.

மாதவிடாய் காலத்திலும் சிறுமிகள் பள்ளிக்கு செல்ல உதவ முன்வந்துள்ளது அம்மடா அறக்கட்டளை. கிவ்ஹெர்5(GiveHer5) மூலம் சிறுமிகளுக்கு நாப்கின் வாங்க யார் வேண்டுமானாலும் உதவி செய்யலாம்.

நீங்கள் வெறும் ரூ.150 நன்கொடை அளித்தால் அதை வைத்து ஒரு சிறுமிக்கு மீண்டும் பயன்படுத்தப்படும் 2 சாப்கின்ஸ் கிடைக்கும். இந்த 2 சாப்கின்ஸ் ஓராண்டு வரை உழைக்கும்.

ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுவதற்கும் உதவ ரூ. 6 ஆயிரம் மட்டுமே தேவை. அனைத்து பெண்களாலும் காசு கொடுத்து நாப்கின் வாங்க முடியாது. இந்நிலையில் இந்த அறக்கட்டளையின் முயற்சி பாராட்டுக்குரியது.

பாராட்டுவதோடு நின்றுவிடாமல் நம்மால் முடிந்ததை நன்கொடையாக அளித்து யாராவது ஒரு சிறுமியின் சிரமத்தை குறைக்கலாமே.

English summary
Ammada trust has come up with GiveHer5 initiative to help girls enjoy their studies without that 5 day break everymonth because of periods.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X