For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எரிவாயு லாரிகள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு.. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பிப்.16ல் ஆர்ப்பாட்டம்

எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வரும் பிப்ரவரி 16ல் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் இன்று முதல் ஸ்டிரைக்- வீடியோ

    நாமக்கல்: எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வரும் பிப்ரவரி 16ல் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருக்கிறது.

    இந்தியா முழுக்க இதுவரை மண்டல அளவில் எரிவாயு டேங்கர் லாரி டெண்டர் விடப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி டெண்டர் என்ற புதிய மாநில முறையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து இருக்கிறது.

    take this Kongunadu Makkal Desia Katchi supports lpg tanker lorries strike

    இதனால் நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்ட தென்மண்டல சமையல் எரிவாயு டேங்கர் லாரி பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்தச் சங்கத்தின் உறுப்பினர்களுக்குச் சொந்தமாக சுமார் 4,500 கியாஸ் டேங்கர் லாரிகள் இந்தியா முழுவதும் இயங்கி வருகிறது.

    இதை எதிர்த்து தென்மண்டல சமையல் எரிவாயு டேங்கர் லாரி பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 12ம் தேதியில் இருந்து இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    தற்போது கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இதற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறது. இந்தப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் வரும் பிப்ரவரி 16ல் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

    English summary
    Kongunadu Makkal Desia Katchi rises its support toward lpg tanker lorries strike. It says that, they will do protest on supporting lpg tanker lorries strike on Feb 16.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X