For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியின் இலங்கைப் பயணம்... ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட 300 தமிழ் அமைப்பினர் கைது!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழ் அமைப்பினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சைதாப்பேட்டையில் 20க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு தமிழ் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Tamil activist protest against Modi’s Lankan Visit

சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்தேசிய விடுதலை இயக்கம், மதிமுக, மனித நேய மக்கள் கட்சி, பெரியார் விடுதலை கழகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் பங்கேற்றன.

Tamil activist protest against Modi’s Lankan Visit

இலங்கையுடன் இந்தியா எவ்வித உறவும் மேற்கொள்ளக்கூடாது என்றும், இலங்கையில் நடந்த மனிதஉரிமை மீறல்கள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

Tamil activist protest against Modi’s Lankan Visit

இலங்கை அதிபருக்கு எதிராகவும், மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்தும் அவர்கள் பலவித முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

300 மேற்பட்டவர்களை கைது செய்து, சைதாப்பேட்டை s.p.s திருமணமண்டபத்தில் அடைத்துவைத்த போலீஸ் பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர்.

அமெரிக்க தூதரகம் முற்றுகை

சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படுவதாக மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மே17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தின.

போர்க்குற்றம் பற்றிய ஐநா அறிக்கை வெளியிடுவதில் தாமதம் தொடர்கிறது. இதற்கு அமெரிக்காவே காரணம் என்று தமிழ் அமைப்புகள் புகார் தெரிவித்தன. இதனால், அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

English summary
Over 300 including Tamil Desia Viduthalai iyakkam leader Kolathur mani and Tamil activist MDMK, cadres was arrested for lay siege to the Raj Bhavan in Chennai.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X