For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக பட்ஜெட் 2014

By Super
Google Oneindia Tamil News

- நிதிப் பங்கீடு, மானிய உதவிகளுக்கனா நிதியை மத்திய அரசு வழங்கவில்லை

- ஓய்வூதிய பலன்களுக்கு ரூ16,021 கோடி ஒதுக்கீடு

- மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை ரூ 1500ஆக உயர்வு

- மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ 4 ஆயிரம் பராமரிப்பு உதவித் தொகை

- சிறுபான்மையினர் நலனுக்கு ரூ93.84 கோடி ஒதுக்கீடு

- சத்துணவுத் திட்டத்துக்கு ரூ1412.88 கோடி ஒதுக்கீடு

- நடப்பாண்டில் கூடுதலாக 14 பெண்கள் தங்கும் விடுதிகள்

- பெண்கள் தங்கும் விடுதிகளுக்கு ரூ17.50 கோடி ஒதுக்கீடு

- 35 லட்சம் குடும்பங்களுக்கு மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்கள் வழங்கப்படும்

- மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்கள் வழங்க ரூ2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

- தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் 4390 குழந்தைகளுக்கு மறுவாழ்வு

Tamil Nadu Chief Minister J Jayalalithaa and Finance Minister O.Panneerselvam pose for photographers before presenting the state budget for 2014-15

- திருமண உதவி திட்டங்களுக்கு ரூ751.09 கோடி ஒதுக்கீடு

- சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ 178.51 கோடி

- தமிழ்நாடு செல்வோம்- சுற்றுலா துறையை மேம்பாட்டுக்கான புதிய திட்டம்

- முதல் தலைமுறை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் திருப்பி வழங்கப்படுகிறது

- கல்வி கட்டணம் திருப்பி வழங்கும் திட்டத்துக்கு ரூ585.17 கோடி ஒதுக்கீடு

- உயர்கல்வித் துறைக்கு ரூ3,627.93 கோடி ஒதுக்கீடு

- பள்ளி கல்வி துறைக்கு ரூ17,731.77 கோடி ஒதுகீடு

- தஞ்சாவூர், திருநெல்வேலியில் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள்

- தஞ்சாவூர், நெல்லை பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்க ரூ300 கோடி

- கர்ப்பிணி பெண்களுக்கு உதவ ரூ716.77 கோடி ஒதுக்கீடு

- அம்மா மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு ரூ757.50 கோடி ஒதுக்கீடு

- 700 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்படும்

- மாவட்டங்களின் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு ரூ745.67 கோடி ஒதுக்கீடு

- சூரிய ஒளி மின்சார திட்டத்துக்கு ரூ100 கோடி

- கிராமப்புற குடிநீர் வழங்கல் திட்டத்துக்கு ரூ1500 கோடி ஒதுக்கீடு

- பேரூராட்சிகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ150 கோடி

- சென்னை பெருநகர மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ500 கோடி

- நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு மேம்பாட்டுக்கு ரூ3,734 கோடி ஒதுக்கீடு

- குக்கிராமங்கள் மேம்பாடு திட்டத்துக்கு ரூ750 கோடி

- ரூ 2308 கோடி செலவில் 9235 கி.மீ சாலைகள் தார் சாலைகளாக மாற்றம்

- தமிழகத்தின் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ.65,000 கோடி

- தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் புதிய தொழில்முனைவோருக்கு 10% ஒதுக்கீடு

- விலையில்லா வேஷ்டி, சேலைக்கு ரூ499.16 கோடி ஒதுக்கீடு

- உள்ளாட்சி அமைப்பு மேம்பாட்டுக்கு ரூ5168.07 கோடி ஒதுக்கீடு

- அரசு தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களை நவீனமயமாக்க ரூ50 கோடி ஒதுக்கீடு

- முதல் தலைமுறை தொழில் முனைவோரை உருவாக்க ரூ100 கோடி ஒதுக்கீடு

- ரூ26,625 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

- சென்னையில் சர்வதேச தொழில் முதலீட்டாளர் மாநாட்டுக்கு ரூ100 கோடி ஒதுக்கீடு

- 2014-15ல் மோனோ ரயில் திட்டத்துக்கு ரூ200 கோடி ஒதுக்கீடு

- சென்னையில் ஜிபிஎஸ் வசதியுடன் ஒருங்கிணைந்த பேருந்து தகவல் அமைப்பு

- அனைத்து சென்னை மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி

- ரூ200 கோடியில் 1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்

- மின்வாரிய கடன் பொறுப்பில் ரூ2ஆயிரம் கோடியை அரசு ஏற்கும்

- கூடுதலாக 3330 மெகாவாட் மின்சாரத்தைப் பெற ஒப்பந்தம்

- 12799 மெகாவாட் உச்சதேவையை தமிழக அரசு பூர்த்தி செய்துள்ளது மிகப் பெரும் சாதனை

- மின்பற்றாக்குறை வெகுவாக குறைவு- மின் தடையும் குறைவு- ஓ.பி.எஸ்.

- சென்னை கூவம் நதியை சீரமைக்க பெருந்திட்டம் செயல்படுத்தப்படும்

- ரூ3833.82 கோடியில் 5 ஆண்டுகளில் கூவம் நதி சீரமைக்கப்படும்

- கூவம் சீரமைப்பால் பாதிக்கபடும் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்க ரூ2077.29 கோடி

- சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளைக்கு ரூ500 கோடி

- அம்மா மருந்தகங்கள் கூட்டுறவுத் துறை மூலம் நடத்தப்படும்

- 4887 வி.ஏ.ஓக்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்

- பாசனப் பணிகளுக்கு ரூ100 கோடி நிதி ஒதுக்கீடு

jay and op

- நீர்ப்பாசனதுறைக்கு ரூ3669.79 கோடி நிதி ஒதுக்கீடு

- கூட்டுறவு பயிர்க்கடன் ரூ5 ஆயிரம் கோடியாக உயர்த்தப்படும்

- ரூ50 கோடி செலவில் தமிழ்நாடு பருத்தி சாகுபடி அதிகரிக்க புதிய இயக்கம்

- பருத்தி சாகுபடியை இரட்டிப்பாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

- 9 நெல் அரவை ஆலைகளை நவீனப்படுத்த ரூ36 கோடி ஒதுக்கீடு

- 100 அம்மா மருந்தகங்கள் புதிதாக உருவாக்கப்படும்- ஓ.பி.எஸ். அறிவிப்பு

- ரூ281 கோடிக்கு சிறப்பு பொங்கல் பரிசு பைகள் வழங்கப்பட்டன

- தூத்துக்குடி புன்னைக்காயல் தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரத்தை நிலைப்படுத்த ரூ18 கோடி

- ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் விரிவாக்கப்படும்

- நடப்பாண்டில் பால் உற்பத்திக்காக ரூ70.68 கோடி ஒதுக்கீடு

- 3 ஆண்டுகளில் பால் கொள்முதல் அளவு உயர்வு

- சென்னையில் அக்டோபரில் சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு

- 1.5 லட்சம் பேருக்கு செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் வழஙங்கப்படும்

- ஆடு, மாடுகள் வழங்க ரூ 198.25 கோடி நிதி ஒதுக்கீடு

- தமிழகத்தில் 3.34 லட்சம் ஏக்கரில் பருத்தி சாகுபடி- 4 லட்சம் பேரல்கள் உற்பத்தி

- ரூ323 கோடி செலவில் வேளாண் வளர்ச்சி திட்டங்கள்

- திருந்திய நெல் சாகுபடி முறை 3 லட்சம் ஏக்கருக்கு விரிவாக்கம்

- வருவாய்த்துறை கணிணிமயமாக்கம்.. வி.ஏ.ஓக்களுக்கு லேப்டாப்

- உதகமண்டலத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் கோட்டம்

- குடிநீர் தட்டுப்பாடு, கால்நடை தீவன தட்டுப்பாட்டை போக்க ரூ681 கோடி நிவாரண தொகுப்பு

- 2014-15ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிக்கு ரூ 39.2 கோடி ஒதுக்கீடு

- தமிழகத்துக்கான மழை அளவில் 20% குறைவு- வறட்சி நீடிக்கிறது

- அரசு கட்டணங்களை ஒரே இடத்தில் செலுத்த பொதுச்சேவை மையங்கள்

- 60 ஆயிரம் பசுமைவீடுகள் கட்ட ரூ1260 கோடி நிதி ஒதுக்கீடு

- தஞ்சாவூர் மல்லிப்பட்டினத்தில் ரூ60 கோடியில் மீன்பிடி துறைமுகம்

- சாலை கட்டமைப்புக்கு ரூ2,800 கோடி நிதி ஒதுக்கீடு

- தஞ்சாவூர் மல்லிப்பட்டினத்தில் ரூ60 கோடியில் துறைமுகம்

- நடப்பாண்டில் 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டப்படும்

- ரூ100கோடி செலவில் 118 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்

- நடப்பாண்டில் காவல்துறைக்கு ரூ5186.2 கோடி ஒதுக்கீடு

- 2014-15ல் சிறைச்சாலை துறைக்கு ரூ 194.66 கோடி ஒதுக்கீடு

- தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்!

- அதிமுக அரசின் 4வது பட்ஜெட் தாக்கல்!

- நாளைய பாரதத்தை நிர்மாணிக்கப் போகும் வெற்றித் திருமகள் ஜெ. : ஓ. பன்னீர் புகழாரம்

- ஒப்பிலா தலைவி..அன்பின் இலக்கணம், முத்தமிழ் தத்துவம் . ஜெக்கு ஓ.பி.எஸ். புகழாரம்

- பாரத தேசத்தை உலக அரங்கில் உயர்த்தப் போகும் மகத்தான தலைவி ஜெ.- ஓ.பி.எஸ்

- பாரதியார் வரிகளை மேற்கோள்காட்டி ஜெக்கு ஓ.பி.எஸ். பாராட்டு

- பொருளாதார வளர்ச்சி பாதிப்புக்கு மத்திய அரசுதான் காரணம்- ஓ.பி.எஸ்.

- 2013-14ல் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 5%க்கு கூடுதலாக இருக்கும்- ஓ.பி.எஸ்.

- 2014-15ஆம் ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடு ரூ 42,185 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது

- கிராமப்புற ஏழை மக்களுக்கு நிலையான வாழ்வாதாரம் உருவாக்க நடவடிக்கை

- 2014-15 புதுவாழ்வு திட்டத்துக்கு ரூ49.05 கோடி ஒதுக்கீடு

- நகர்ப்புறங்களில் 17.28 லட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கின்றனர்

- 2014-15-ல் காவல்துறை கட்டிடங்கள் கட்ட ரூ571.67 கோடி ஒதுக்கீடு

- அதிமுக ஆட்சியில் 24, 503 காவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன

- தமிழக அரசின் பட்ஜெட்டை புறக்கணித்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

English summary
Tamil Nadu Budget 2014- Live
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X