For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கே.வி.ராமலிங்கம் 'டிஸ்மிஸ்'- ஆர்.பி. உதயக்குமார் மீண்டும் அமைச்சரானார்!

Google Oneindia Tamil News

kv ramalingam and udayakumar
சென்னை: தமிழக அமைச்சரவையில் இன்று திடீரென மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியிலி்ருந்து மாற்றப்பட்டு இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக மாற்றப்பட்டு பின்னர் கட்சிப் பதவியும் பறிக்கப்பட்ட கே.வி.ராமலிங்கம் தற்போது ஒட்டுமொத்தமாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேலும், சில காலத்திற்கு முன்பு அமைச்சர் பதவியை இழந்த ஆர்.பி. உதயக்குமார் மீண்டும் அமைச்சராக்கப்பட்டுள்ளார்.

ஆர்.பி. உதயக்குமாருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது. அவர் 11ம் தேதி காலை 9.45 மணிக்கு பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 3 பேரின் பொறுப்புகள் மாற்றம்

இதேபோல அமைச்சர் பி.வி.ரமணாவுக்கு வருவாய்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

எம்.சி.சம்பத்துக்கு வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தோப்பு என்.டி.வெங்கடாசலத்துக்கு சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தோப்பு வெங்கடாசலத்திடம்தான், கே.வி.ராமலிங்கத்திடமிருந்து பறிக்கப்பட்ட ஈரோடு நகர் அதிமுக செயலாளர் பொறுப்பை சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கினார் என்பது நினைவிருக்கலாம்.

English summary
Minister K V Ramalingam has been sacked from Tamil Nadu cabinet. R B Udayakumar has been made minister again. There are three more changes been made in the ministry by CM Jayalalitha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X