For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ. 3.55லட்சம் கோடி கடன்... ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பது எப்படி?

ஆண்டுக்கு ஆண்டு தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் கடன் ரூ. 3,55,845 கோடியாக இருக்கும் என்று 2018-2019-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓபிஎஸ் கூறியுள்ளார்.

சட்டசபையில் இன்று பட்ஜெட் வாசித்த ஓபிஎஸ் 2018 -19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வரும் நிதியாண்டில் தமிழக அரசு சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாயை நிகர கடனாக வாங்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார். தமிழக அரசின் கடன் சுமை ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது.

கடந்த பத்தாண்டு ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் சுமை பல மடங்காக உயர்ந்துள்ளது. காரணம் இலவசங்களை அள்ளி வீசி கடன்காரர்களாக மாற்றியுள்ளனர்.

2001-2006 ஜெ ஆட்சி

2001-2006 ஜெ ஆட்சி

31.3.2006 அன்று ஜெயலலிதா ஆட்சி செய்த ஐந்தாண்டுக் காலத்துக்குப்பின், தமிழக அரசின் கடன் ரூ.57,457 கோடியாக அதிகரித்தது. அதன் பின்னர் 2006ம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி அமைத்தது.

திமுக ஆட்சி கடன்

திமுக ஆட்சி கடன்

2011ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடிவடையும் போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழக அரசின் கடன் ரூ.1,01,439 கோடியாக அதிகரித்தது. இதனையடுத்து 2011-ம் ஆண்டு மே மாதம் தமிழகத்தின் முதல்வரானார் ஜெயலலிதா.

அதிகரித்த கடன்

அதிகரித்த கடன்

அவர் ஆட்சி செய்த அந்த ஐந்து ஆண்டுக் காலத்தில் கடன் அளவு மிகப் பெரிய அளவில் அதிகரித்தது. 2011-ல் தமிழகத்தின் கடன் ரூ.1,14,470 கோடியாக இருந்தது. இது 2012ல் இது ரூ.1,30,630 கோடியாகவும், 2013ஆம் ஆண்டில் ரூ.1,52,810 கோடியாகவும் உயர்ந்தது.

ரூ. 2 லட்சம் கோடி

ரூ. 2 லட்சம் கோடி

2014ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டின்படி ரூ.1,71,490 கோடியாகவும் அதிகரித்தது. அதன்பின் 2015-ல் பட்ஜெட் மதிப்பீட்டின்படி கடன் ரூ.1,95,290 கோடியாகவும் அதிகரித்தது. 2015-16-ல் தமிழகத்தின் கடனானது ரூ.2,11,483 கோடி என்று தெரிவிக்கப்பட்டது.

தள்ளாடும் தமிழகம்

தள்ளாடும் தமிழகம்

கடந்த 2016-17-ம் நிதி ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 2017 மார்ச் மாத முடிவில் தமிழக அரசின் மொத்த கடன் நிலுவை ரூ 2,47,031 கோடியாக இருக்கும் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பல அரசியல் கட்சிகள் இது மிக அதிகமான கடன் அளவு என்று கருத்து கூறினர்.

அதிகரிப்பது எப்படி?

அதிகரிப்பது எப்படி?

2017-18-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக அரசின் மொத்த கடன் 3,14,366 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிதி ஆண்டும் தமிழக அரசின் கடன் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. காரணம் இலவசங்களை அள்ளி வீசுவதுதான் என்பது நிதித்துறை வல்லுநர்களின் கருத்து.

ரூ. 3.55 லட்சம் கோடி

ரூ. 3.55 லட்சம் கோடி

2018-19ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக அரசின் கடன் ரூ. 3,55,845 கோடியாக இருக்கும் என்று பட்ஜெட்டை தாக்கல் செய்த துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓபிஎஸ் கூறியுள்ளார்.

கடன் வட்டி

கடன் வட்டி

தமிழக அரசு கடனுக்கு வட்டி செலுத்துவது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துத்தான் வருகிறது. 2011-12-ம் நிதி ஆண்டு திட்ட மதிப்பீட்டில் ரூ.9,233.40 கோடி. இது 2012-13-ல் ரூ.10,835.84 கோடியும், 2013-14-ல் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ.13,129.77 கோடியும், 2014-15-ல் ரூ.15,890.18 கோடி என்று வட்டி செலுத்தியுள்ளது. இதுவே 2015-16-ல் ரூ.17,856.65 கோடியாகவும், 2016-17-ல் ரூ.19,999.45 கோடியாக செலுத்தப்பட்டது. இப்போது ரூ. 20 ஆயிரம் கோடிக்கு மேல் வட்டி மட்டுமே செலுத்துகின்றனர்.

English summary
Total debt at the end of 2018-19 pegged at Rs 3.55 lakh crore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X