For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விண்ணை எட்டிய காய்கறிகள் விலை: சென்னையில் மலிவு விலை நடமாடும் காய்கறிகடைகள் ...

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஒரு கிலோ கத்தரிக்கா 200 ரூபா... உருளைக்கிழங்கு 150 ரூபா... தக்காளி 150 ரூபாய், எப்படி வாங்கி சமைப்பது? என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டனர் சென்னைவாசிகள்.

முகாம்களில் தஞ்சமடைந்தவர்களுக்கு நிவாரணப்பொருட்களும், உணவுகளும் ஆங்காங்கே கிடைக்கிறது. ஆனால் வெள்ளம் வடிந்து வீடுகளுக்குத் திரும்பியவர்களின் பாடு பெரும்பாடாக உள்ளது. காய்கறிகள், பால், குடிநீர் உள்ளிட்ட அத்திவாசிய பொருட்கள் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.

கடைகளில் காய்கறிகளும், மளிகைப் பொருட்களும் திடீரென்று விலை உயர்ந்து மக்களை மிரட்டத் தொடங்கியுள்ளது. எனவே மக்களுக்கு பயன்படும் வகையில் 32 நடமாடும் மலிவுவிலை காய்கறி கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பசுமை பண்ணை காய்கறி கடைகள்

பசுமை பண்ணை காய்கறி கடைகள்

நுகர்வோர்களுக்குத் தரமான காய்கறிகள் நியாயமான விலையில் கிடைத்திடவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திடவும், சென்னையில் 58 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்மூலம், மொத்தம் 58 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்காலிக காய்கறி கடைகள்

தற்காலிக காய்கறி கடைகள்

இந்நிலையில், நவம்பர் மாதம் பெய்த மழையின் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்து, விலை உயர்ந்ததால், குறைந்த விலையில் தரமான காய்கறிகளைப் பொது மக்கள் பெற சென்னை நகரில் கூடுதலாக 50 காய்கறி விற்பனை மையங்களை, தற்காலிகமாக திறக்கப்பட்டது.

நடமாடும் காய்கறிகடைகள்

நடமாடும் காய்கறிகடைகள்

கடந்த திங்கட்கிழமையன்று பெய்த கடும் மழையால் சென்னைக்கு காய்கறிகள் வரத்து குறைந்தமையால், காய்கறிகளின் விற்பனையைச் சீர்படுத்தும் வகையிலும், நுகர்வோருக்கு உரிய நேரத்தில் தரமான காய்கறிகள், நியாயமான விலையில், அவர்களின் குடியிருப்புகளுக்கருகில் கிடைக்கும் வகையிலும், கூடுதலாக பதினொன்று நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

32 இடங்களில் காய்கறிகள் விற்பனை

32 இடங்களில் காய்கறிகள் விற்பனை

காரணீஸ்வரர் கோவில் தெரு, (சைதாப்பேட்டை),
ஜி. என். செட்டி தெரு, (தியாகராய நகர்),
காம்தார் நகர், (நுங்கம்பாக்கம்),
ராகவேந்திரா கல்யாண மண்டபம், (கோடம்பாக்கம்),
நுங்கம்பாக்கம் இரயில்வே ஸ்டேஷன்,
ரட்லேண்ட்கேட்,
எல்லையம்மன் கோவில் தெரு, (தேனாம்பேட்டை),
மயிலாப்பூர் குளம்,
பெசன்ட்நகர்,
சிந்தாதிரிப்பேட்டை,
நேஷனல் பப்ளிக் ஸ்கூல் (கோபாலபுரம்),
இராயப்பேட்டை,
சாந்தி காலனி, (அண்ணாநகர்),
போக்குவரத்து அலுவலகம் அருகில் (அண்ணாநகர்),
வசந்தம் காலனி (அண்ணாநகர்),
எம்.எம்.டி.ஏ. காலனி அரும்பாக்கம்,
சேணியம்மன் கோயில் தெரு, (தண்டையார்பேட்டை),
திருவொற்றியூர் பேருந்து நிலையம் பார்த்தசாரதி பாலம் (தங்கசாலை),
மண்ணப்பன் தெரு, (பழைய வண்ணாரப்பேட்டை),
சிங்கந்தர்பாளையம், (கொருக்குப்பேட்டை),
வியாசர்பாடி,
முத்தமிழ் நகர், (வண்ணாரப்பேட்டை),
காசிமேடு, குறுக்கு தெரு, (புது வண்ணாரப்பேட்டை),
வீரராகவன் தெரு, (புது வண்ணாரப்பேட்டை),
பாலவாக்கம்,
மடிப்பாக்கம்,
மேடவாக்கம்,
உத்தண்டி, சோழிங்கநல்லூர், மற்றும் ஆதம்பாக்கம்.

English summary
With prices of vegetables touching the dark rainy clouds here, the Tamil Nadu government on Saturday announced operation of 11 mobile vegetable shops in 32 localities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X