For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக அரசின் இணையதளத்தில் இறந்து போன எம்.எல்.ஏ பெயர்.. அப்டேட் ஆகாததால் குழப்பம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் அப்டேட் செய்யப்படாமல் உள்ளதால் பார்வையாளர்கள் குழப்பமடைந்துள்ளனர். சில அமைச்சர்களின் படங்கள் இல்லாததுடன், எம்எல்ஏக்கள் பட்டியலில் இறந்தவர் பெயர் இடம்பெற்றுள்ளது.

தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.tn.gov.in செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், தமிழக ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களின் பெயர், விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர, அரசுத் துறைகள் சார்ந்த இ-சேவைகள், அனைத்து சான்றிதழ்களுக்குமான படிவங்கள், அறிவிப்புகள், அரசாணைகள், முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் செய்தி மற்றும் புகைப்படங்கள் அதில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

அப்டேட் ஆகாத இணையதளம்

அப்டேட் ஆகாத இணையதளம்

சமீபகாலமாக இந்த இணைய பக்கத்தில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்படாமல் உள்ளன. முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை பதவியேற்று ஒரு மாதமான நிலையில், அரசின் இணையதள ஆங்கில வடிவப் பக்கத்தில் அமைச்சர்கள் கே.சி.கருப்பண்ணன் (சுற்றுச் சூழல்), ஓ.எஸ்.மணியன் (கைத்தறி), வெல்லமண்டி நடராஜன் (சுற்றுலா) ஆகியோரது படங்கள் இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை.

அதேபோல, அமைச்சரவை பட்டியலில் 3வது இடத்தில் உள்ள திண்டுக்கல் சீனிவாசனின் (வனத் துறை) புகைப்படம்கூட தமிழ் வடிவப்பக்கத்தில் இடம் பெறவில்லை.

இறந்த எம்.எல்.ஏ பெயர்

இறந்த எம்.எல்.ஏ பெயர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட எஸ்.எம்.சீனிவேல் (அதிமுக) பதவி ஏற்பதற்கு முன்பே உடல்நலக்குறைவால் இறந்தார். இதனால் அந்த தொகுதிக்கான எம்எல்ஏ பதவி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசின் இணையதளத்தில் உள்ள எம்எல்ஏக்கள் பட்டியலில் சீனி வேலின் பெயரும் தற்போதுவரை இடம்பெற்றுள்ளது.

அரசாணைகள் பதிவேற்றம்

அரசாணைகள் பதிவேற்றம்

அரசு இணைய ஆங்கில வடிவப் பக்கத் தில், தமிழ் வளர்ச்சித் துறையின் இணைப்பில் 2006, கைத்தறித் துறை இணைப்பில் 2013, போக்குவரத்து, சட்டம், நெடுஞ்சாலைத் துறைகளின் இணைப்பில் 2014ம் ஆண்டு வரை மட்டுமே அரசாணைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல, தமிழ் வடிவப் பக்கத்தில், தகவல் தொழில்நுட்பத் துறை இணைப்பில் 2011, தமிழ் வளர்ச்சி, உயர்கல்வித் துறை இணைப்பில் 2012ம் ஆண்டு வரை மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதற்குப் பிறகு புதுப்பிக்கப்படவில்லை.

நம்பகத்தன்மை வேண்டுமே

நம்பகத்தன்மை வேண்டுமே

தமிழக அரசின் தகவல்கள் அப்டேட் செய்யப்படாமலும், தவறுடனும் இருந்தால், அரசின் இணையதளம் மீது மக்களுக்கு நம்பகத்தன்மை குறைந்துவிடும். எனவே, அரசின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் உள்ள தகவல்களைப் புதுப்பிக்கவும், அரசாணை களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்யவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
People worry Tamil Nadu government portal not updated. MLA Senivel name insert in government portal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X