For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட் தேர்வுக்கு பயிற்சி பெற 54,000 கேள்விகளுடன்'சிடி' ... அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற 54000 கேள்வி பதில்கள் அடங்கிய சிடியை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற 54000 கேள்வி பதில்கள் அடங்கிய சிடியை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் மாணவர்களுக்கு உலக தரம் வாய்ந்த அளவில் புதிய மடிக்கணினி வழங்கப்படும் என்றார்.

Tamil Nadu government provide a CD containing 54000 questions and answers for NEET exam

நீட் தேர்வுக்கு மாணவர்கள் பயிற்சிபெற சிடி வடிவில் கையேடு வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அந்த சிடி கையேட்டில் 54,000 கேள்வி-பதில்கள் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.

கேள்வி பதில்கள் அடங்கிய, 30 மணிநேரம் ஓடக்கூடிய இந்த சிடியில் கேள்வி பதில்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும் என்றும் அவர் கூறினார். நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்களை தயார்படுத்தவே தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் தமிழகத்தில் அரசுப்பள்ளிகளின் சீருடை மாற்றப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். அதன்படி 1முதல் 5ஆம் வகுப்பு வரை ஒரு சீருடை என்றும், 6 முதல் 10ஆம் வகுப்பு வரை ஒரு சீருடை என்றும் 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கு ஒரு சீருடை என மொத்தம் 3 பிரிவுகளில் சீருடை மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

English summary
The Tamil Nadu government has decided to provide a CD containing 54000 questions and answers to students for NEET exam. School education minister Senkottaiyan Announced this today. The govt school uniforms also going to changed minister Senkottaiyan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X