For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ. 100, ஒரு கிலோ அரிசி, சர்க்கரை.. தமிழக அரசின் பொங்கல் பரிசு!

Google Oneindia Tamil News

Rice
சென்னை: தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு ஒரு கார்டுக்கு ரூ. 100, ஒரு கிலோ அரிசி, சர்க்கரை ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதன் மூலம் தமிழகத்தில் உள்ள சுமார் 1.84 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் பலன் அடைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறப்புப் பொங்கல் பரிசாக ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ. 20 மதிப்புள்ள ஒரு கிலோ பச்சரிசி, ரூ. 40 மதிப்புள்ள ஒரு கிலோ சர்க்கரை, ரூ. 100 ரொக்கம் ஆகியவை வழங்கப்படும்.

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் பண்டிகைக்கு முன்பாகவே இது விநியோகிக்கப்படும்.

இதன் மூலம் அரசுக்கு ரூ. 281 கோடி செலவீனம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamil Nadu chief minister J Jayalalithaa on Tuesday announced that Rs 100 in cash and 1kg each of rice and sugar would be distributed to 18.4-million ration card holders in the state to help them celebrate Pongal, the harvest festival. In a statement issued by the state government, Jayalalithaa said: "A special Pongal pack containing one kilo of raw rice worth Rs 20, one kilo of sugar worth Rs 40 and a cash of Rs 100 will be given to 18.4 million ration card holders." She said the distribution of gifts would start before Pongal festival.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X