For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீங்க அதிகாரியா... ரவுடியா... வாணியம்பாடி அதிகாரியை அழைத்து வெளுத்து வாங்கிய அமைச்சர்

Google Oneindia Tamil News

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சாலையோர வியாபாரிகளிடம் அதிகார மமதையில் ஆட்டம் போட்ட அதிகாரி சிசில் தாமசுக்கு மேலிடத்தில் இருந்து கடுமையாக டோஸ் விழுந்துள்ளது.

Recommended Video

    மன்னிப்பு கேட்டார் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர்

    அதிகாரியை போல் நடந்துகொள்ளாமல் ஒரு ரவுடியை போல் நடந்தால் அரசுக்கு தான் தேவையின்றி கெட்டப்பெயர் ஏற்படும் என வெளுத்து வாங்கப்பட்டுள்ளது.

    அதிரடி ஆய்வு என்ற தலைப்பில் செய்தியில் இடம்பிடிக்க நினைத்து, தனது ஆட்களை வைத்து தாமே வீடியோ எடுத்து இப்போது வம்பில் சிக்கித்தவிக்கிறார் வாணியம்பாடி ஆணையர் சிசில் தாமஸ்.

    டாஸ்மாக்கை திறந்து வச்சதாலதான்.. அந்த குழந்தையை கொளுத்திட்டாங்க.. திறக்காதீங்க.. நந்தினி ஆவேசம்டாஸ்மாக்கை திறந்து வச்சதாலதான்.. அந்த குழந்தையை கொளுத்திட்டாங்க.. திறக்காதீங்க.. நந்தினி ஆவேசம்

    வாணியம்பாடி

    வாணியம்பாடி

    வேலூர் மாவட்டத்தில் இருந்து அண்மையில் புதிதாக பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்திற்குள் வருகிறது வாணியம்பாடி. இந்த தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்ற நிலோபர் கபில் அமைச்சராகவும் உள்ளார். இந்த சூழலில் வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் நேற்று ஆய்வு நடத்த சென்ற போது, வியாபாரிகளிடம் இருந்து பழங்களை பறித்து குப்பையில் கொட்டியதோடு ஒரு பழ வண்டியை தலைகவிழ சாய்க்கவும் செய்தார்.

    உள்ளூர் அமைச்சர்

    உள்ளூர் அமைச்சர்

    இந்தக் காட்சி நேற்று பிற்பகல் முதல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதுடன் கடும் கண்டனத்திற்கும் உள்ளானது. இதுமட்டுமல்லாமல் அந்த அதிகாரி சிசில் தாமஸ் வியாபாரிகளின் சாபத்திற்கும் உள்ளானார். வாணியம்பாடி நகராட்சி ஆணையரின் இந்த நடவடிக்கையால் உள்ளூர் அமைச்சரான நிலோபர் கபில் கடும் கோபம் கொண்டார். மேலும்,இது போன்ற செயல்களால் உள்ளூர் மக்கள் தன் மீது வருத்தப்படுவார்கள் என எண்ணினார்.

    அறிவுரை

    அறிவுரை

    இதையடுத்து அவரை அழைத்து பேசிய அமைச்சர், உங்களால் அரசுக்கு தான் மக்கள் மத்தியில் கெட்டப்பெயர் ஏற்படுகிறது என்றும், வியாபாரிகளிடம் நடந்துகொண்ட விதம் தவறானது எனவும் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியிருக்கிறார். மேலும், மாவட்ட அமைச்சரான கே.சி.வீரமணி கவனத்திற்கும் இந்த வீடியோ சென்றுள்ளது. அவரும் இதைப்பார்த்து விட்டு அவர் பங்குக்கு அந்த அதிகாரியை அழைத்து தனது பாணியில் அறிவுரை கூறியிருக்கிறார்.

    ஏற்க மறுப்பு

    ஏற்க மறுப்பு

    இதையடுத்து தான் இன்று ஊடகங்களை அழைத்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவே இது போன்று செய்ததாக விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அவரது விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பு, சிசில் தாமஸை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. மேலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை தாங்கள் ஓயப்போவதில்லை எனவும் கூறுகிறார் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில செயலாளர் கோவிந்தராஜுலு.

    English summary
    Tamil Nadu Merchants Association Federation demands to suspend Vaniyambadi officer
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X