For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆக்சுவலி.. அடுத்தடுத்து தமிழக அரசியல் பரபரப்பாக போகுதாம்.. முக்கிய கட்சிகள் தீவிர ஆலோசனை!

அரசியல் கட்சிகள் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசியல் களம் அடுத்து வரப் போகும் நாட்களில் அதிரடிகள் பலவற்றை காணும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. பல முக்கிய நிகழ்வுகள் அரங்கேறலாம் என்றும் அடுத்து வரப் போகும் நாட்களில் பல மாற்றங்களை மக்கள் காணப் போகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இது என்ன மாதிரியான மாற்றம் என்பது சரியாகத் தெரியவில்லை என்றாலும் கூட சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு பல அதிரடி மாற்றங்களை சில கட்சிகள் காணலாம் என்றும் சொல்லப்படுகிறது.

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என இரு ஆளுமைகள் நம்மை விட்டுப் பிரிந்து போன பின்னர் தமிழகஅரசியல் களமே முற்றிலும் நிலை குலைந்தும், மாறிப் போயும் கிடக்கிறது. யார் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. என்ன நடக்கிறது என்றும் புரியவில்லை.

சென்னையில் பேரணி, போராட்டம் நடத்த தடை... பிப்.12 வரை யாருக்கும் அனுமதி இல்லை சென்னையில் பேரணி, போராட்டம் நடத்த தடை... பிப்.12 வரை யாருக்கும் அனுமதி இல்லை

ஆட்சி மாற்றம்

ஆட்சி மாற்றம்

திமுகவைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று சொன்னார்கள். அது பின்னர் என்ன ஆனது என்றே தெரியவில்லை. இப்போது அது குறித்து திமுக தரப்பு பேசுவதில்லை. அதேபோலத்தான் அதிமுகவும் ஆரம்பத்தில் இருந்தது போல இப்போது இல்லை. அதன் போக்கிலும், செயலிலும் நிறைய மாற்றங்கள் தென்பட்டு வருகின்றன என்பதை மறுக்க முடியாது.

ஜெயலலிதா

ஜெயலலிதா

அதிமுகவைப் பொறுத்தவரை ஜெயலலிதா இல்லாத வெறுமை ஆரம்பத்தில் பெரிய அளவில் இருந்தது. ஆனால் இப்போது அந்த அளவுக்கு இருப்பதாக தெரியவில்லை. காரணம் அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் கிடைத்த முடிவுகள் அதிமுக இன்னும் சீர்குலையவில்லை. அதன் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டிருக்கிறதே தவிர தீவிரம் அப்படியேதான் உள்ளது என்பதை ஒவ்வொரு முறை நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் நிரூபித்தது.

தெம்பு

தெம்பு

தேர்தல் முடிவுகள் பெரிய அளவில் சாதகமாக இல்லாவிட்டாலும் கூட தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவுக்கு சரியான போட்டி அதிமுகதான் என்பதும், அதிமுகவுக்கு எதிர்ப்பு காட்டக் கூடிய தகுதி திமுகவுக்கு மட்டுமே உள்ளது என்பதையும் மக்கள் கண்கூடாக கண்டனர். எனவே இரு கட்சிகளும் மிகத் தெம்பாகவே உள்ளன என்பதுதான் இன்றைய கள உண்மை.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

இடையில் புகுந்த சில புதிய கட்சிகள் குறிப்பாக கமல்ஹாசன் போன்றோர் இப்போது தொய்வடைந்து போயுள்ளனர். ஏன் என்ற காரணம் தெரியவில்லை. அதேசமயம், இவர்களால் மிகப் பெரிய பாதிப்பை திமுகவுக்கோ அல்லது அதிமுகவுக்கோ ஏற்படுத்த முடியவில்லை. சிறு சிறு சலசலப்பை ஏற்படுத்த முடிந்ததே தவிர நிலை குலைய வைக்க முடியவில்லை. ஒரு வேளை வலுவான கூட்டணியை இவர்கள் அமைத்தால் வேண்டுமானால் நிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

மறுபக்கம் காங்கிரஸ், பாஜக, பாமக, தேமுதிக என ஏகப்பட்ட கட்சிகள் கண்களில் கோடிக்கணக்கான கனவுகளுடன் நடமாடிக் கொண்டுள்ளன. இவர்களின் கனவுகள் எந்த அளவுக்குப் பலிக்கும் என்பது திமுக, அதிமுக ஆகியவற்றின் வெற்றியைப் பொறுத்தே உள்ளது. அதேசமயம், வரப் போவதாக சொல்லப்படும் ரஜினிகாந்த் எப்போது வருவார் என்று அவருக்கே தெரியவில்லை.

பந்திப்பூர் காடு

பந்திப்பூர் காடு

ரஜினிகாந்த் எப்படிப்பட்ட பாதையில் போகப் போகிறார் என்பதை இப்போது தெளிவுபடுத்தியுள்ளனர். அடுத்த கட்டமாக பில்டப்.. அதாவது அவருக்கென்று இமேஜை உருவாக்குவது.. அதன் ஒரு கட்டம்தான் இந்த பந்திப்பூர் காட்டுக்குப் போனது. அந்த புரோகிராம் அனேகமாக சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக வெளியாகி மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் காட்டப்படலாம். "70 வயதிலும் காட்டுக்குள் எப்படி அனாயசமாக போய் வந்திருக்கிறார் பாருங்க" என்றஆச்சரிய அலை அப்போது பரவலாம்.

ஆலோசனைகள்

ஆலோசனைகள்

இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் அடுத்து வரும் நாட்களில் பல முக்கிய நிகழ்வுகளை தமிழக அரசியல் களம் காணும் என்று ஒரு பேச்சு கிளம்பியுள்ளது. அது தமிழகத்தைப் புரட்டிப் போடுமா அல்லது அரசியல் களத்தை சூடாக்குமா என்று தெரியவில்லை. ஆனால் சில முக்கிய ஆலோசனைகள் முக்கிய கட்சிகள் மட்டத்தில், முக்கியத் தலைவர்கள் மட்டத்தில் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆட்சி மாற்றமா அல்லது காட்சி மட்டும் மாற்றமா என்பதும் உறுதியாக தெரியவில்லை. முதல்வர் நடத்திய ஆலோசனையில் வெளியில் வெளியான விஷயங்கள் தவிர வேறு பல முக்கிய அம்சங்களும் பேசப்பட்டதாக சொல்கிறார்கள்.

பெரிய சவால்

பெரிய சவால்

தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் நிச்சயம் சில புதிய கட்சிகள் இணையும், சில புதிய கூட்டணிகளும் உருவாகும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் எத்தகு சூழலில் தமிழகம் தேர்தலை சந்திக்கும் என்பதுதான் சுவாரஸ்யமான எதிர்பார்ப்பாகும். ஸோ, மக்களுக்கு அடுத்தடுத்து நல்ல நல்ல காட்சிகளைக் காணக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன. நாம் பல மாதங்களுக்கு முன்பே கூறியபடி.. வரும் தேர்தல் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதில் மக்களுக்கு மிகப் பெரிய சவாலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை!!

English summary
tamil nadu politics may see many changes soon as rajini is boosted by bjp
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X