For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடந்த தேர்தலை விட அதிக பெண்களுக்கு சீட் கொடுத்த திமுக!

Google Oneindia Tamil News

சென்னை: 2011ல் நடந்த சட்டசபைத் தேர்தலை விட இந்த முறை அதிக பெண்களுக்கு சீட் கொடுத்துள்ளது திமுக.

Tamil Nadu polls 2016: DMK fields 19 women candidates

மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் மும்முரத்தில் உள்ள திமுக கடந்த முறை நிறுத்தியதை விட இந்த முறை அதிக பெண்களுக்கு சீட் கொடுத்து அழகு பார்த்துள்ளது.

  • நடப்பு சட்டசபைத் தேர்தலில் 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
  • பொதுத் தொகுதிகளில் 16 பெண்களை வேட்பாளராக்கியுள்ளது திமுக.
  • தனித் தொகுதிகளில் போட்டியிட 3 பெண்களுக்கு திமுக வாய்ப்பளித்துள்ளது.
  • கீதா ஜீவன், பூங்கோதை ஆலடி அருணா ஆகியோரைத் தவிர மற்ற பெண் வேட்பாளர்கள் அனைவரும் புதுமுகங்கள்.
  • முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து புதுமுகமான சிம்லா முத்துச்சோழனை களம் இறக்கியுள்ளது திமுக.
  • முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் மருமகள்தான் சிம்லா முத்துச்சோழன்.
  • மானாமதுரை, சோழவந்தான், சங்கரன்கோவில் ஆகிய 3 தனித் தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கியுள்ளது திமுக.
  • 2011 தேர்தலில் திமுக 124 தொகுதிகளில் போட்டியிட்டது. 11 பெண் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.
  • நடப்பு ஆண்டு இது அதிகரித்துள்ளது. அதாவது திமுக வேட்பாளர்களில் பெண்களின் எண்ணிக்கை 10.98 சதவீதமாகும்.
  • அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 31 பெண்களை அது வேட்பாளராக்கியுள்ளது. இது 13.65 சதவீதமாகும்.
  • தற்போது திமுக பெண்களுக்கு ஒதுக்கியுள்ள தொகுதிகளில், 16ல் அது வென்றதில்லை.
English summary
The DMK, which is eyeing to return to power in Tamil Nadu after a decade, has fielded jut 16 women candidates in the unreserved seats while three in reserved ones. The party, which will contest the May 16 election in alliance with the Congress and some other smaller parties, is fighting in 173 seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X