அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் உள்ளாட்சித் தேர்தல்... அக்டோபர் 2வது வாரத்தில்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கட்சிகள் அனைத்தும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 2 வாரத்தில் நடைபெறலாம் என்று தகவல் வருகிறது. அனேகமாக அடுத்த வாரமே தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.

தமிழக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் அக்டோபர் 24ம் தேதி முடிவடைகிறது. புதிய பிரதிநிதிகள் 25ம் தேதி பதவியேற்க வேண்டும். எனவே 24ம் தேதிக்குள் தேர்தலை நடத்தியாக வேண்டும்.

இதனால் உள்ளாட்சித் தேர்தலை அந்தத் தேதிக்குள் நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஆயத்தப் பணிகளும் ஏற்கனவே தொடங்கி விட்டன. வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியானது. இந்த நிலையில் அடுத்த வாரம் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

கலெக்டர்களுடன் ஆலோசனை

கலெக்டர்களுடன் ஆலோசனை

மாநில தேர்தல் ஆணையர் சீத்தாராமன் ஒவ்வொரு மாவட்ட கலெக்டருடன் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டசபை தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வார்டு வாரியாக பிரித்து பட்டியல் சரி பார்க்கும்பணி தற்போது நடைபெற்று வருகிறது.

ஆளுக்குப் பாதி

ஆளுக்குப் பாதி

உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வருவதால் எந்தெந்த வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 100 வார்டுகள் பெண்கள் வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இந்த பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

முன்னாடி 2 ஓட்டு

முன்னாடி 2 ஓட்டு

இதேபோல் நகராட்சி, பேரூராட்சிகளில் பெண்களுக்கு ஒதுக்கப்படும் வார்டுகள் விவரமும் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதுவரை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ளவர்கள் கவுன்சிலரை தேர்ந்தெடுக்க ஒரு ஓட்டு, மேயர் மற்றும் தலைவர்களை தேர்ந்தெடுக்க ஒரு ஓட்டு என 2 ஓட்டு போட்டனர்.

இப்ப ஒரு ஓட்டு போதும்

இப்ப ஒரு ஓட்டு போதும்

தற்போது இதில் மாற்றம் வந்து விட்டது. அதாவது மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பஞ்சாயத்துத் தலைவர் பதவிகளுக்கு மக்கள் இனி வாக்களிக்கத் தேவையில்லை. மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்க உள்ளதால் இனி மக்கள் ஒரு ஓட்டு போட்டால் போதும்.

25க்குள்

25க்குள்

புதிய உறுப்பினர்கள் அக்டோபர் 25-ந்தேதிக்குள் பதவி ஏற்க வேண்டும் என்பதால் அதற்கு 10 நாட்களுக்கு முன்பே தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. அனேகமாக அக்டோபர் 17-ந்தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது.

வியூகங்கள் ரெடி

வியூகங்கள் ரெடி

தேர்தல் நெருங்கி விட்டதால் கட்சிகளிடமும் பரபரப்பு தொற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளது. தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள ஆளுங்கட்சி முயலும். அதை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் வகுக்கும் என்பதால் மீண்டும் ஒரு பரபரப்பான காலத்திற்கு தமிழகம் செல்லப் போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+