For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 1,பிளஸ் 2 பொதுதேர்வு டைம் டேபிள் ரிலீஸ் - ஸ்டூடன்ஸ் ரெடியா?

பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 1, ப்ளஸ் 2 பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: 10, 11, 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மாணவர்கள் மன அழுத்தம் இன்றி படிப்பதற்காக தேர்வுகளுக்கு இடையே விடுமுறை விடப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி நிறைவடைகிறது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2018 மார்ச் 7ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Tamil Nadu SSLC,Plus one, Pluw two exam Time Table 2018 Release

12ம் வகுப்பு தேர்வு விவரம் பாட வாரியான தேர்வு அட்டவணை:

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 1இல் தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 1 - தமிழ் முதல்தாள்

மார்ச் 2 - தமிழ் 2ம் தாள்

மார்ச் 5 - ஆங்கிலம் முதல் தாள்

மார்ச் 6 - ஆங்கிலம் 2ம் தாள்

மார்ச் 9 - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்

மார்ச் 12 - கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து, உணவியல்

மார்ச் 15 - அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழிற்பிரிவு

மார்ச் 19 - இயற்பியல் மற்றும் பொருளியல்

மார்ச் 26 - வேதியியல், கணக்கு பதிவியல்

ஏப்ரல் 2 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்

ஏப்ரல் 6 - இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிரிவேதியியல், தமிழ்சிறப்பு பாடம்

11ம் வகுப்பு தேர்வு அட்டவணை:

11ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பொதுத்தேர்வு 2018 மார்ச் 7ல் தொடங்கி ஏப்ரல் 16ல் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 30ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 7 - தமிழ் முதல்தாள்

மார்ச் 8 - தமிழ் 2ம் தாள்

மார்ச் 13 - ஆங்கிலம் முதல்தாள்

மார்ச் 14 - ஆங்கிலம் 2ம் தாள்

மார்ச் 20 - கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து, உணவியல்

மார்ச் 23 - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்

மார்ச் 27 - இயற்பியல் மற்றும் பொருளியல்

ஏப்ரல் 3 - வேதியியல், கணக்கு பதிவியல்

ஏப்ரல் 9 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்

ஏப்ரல் 13 - இந்திய கலாச்சாரம், தகவல் தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், உயிரிவேதியியல், தமிழ்சிறப்பு பாடம்

ஏப்ரல் 16 - அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழிற்பிரிவு

10ம் வகுப்பு தேர்வு கால அட்டவணை:

மார்ச் 16 - தமிழ் முதல்தாள்

மார்ச் 21 - தமிழ் 2ம்தாள்

மார்ச் 28 - ஆங்கிலம் முதல்தாள்

ஏப்ரல் 4 - ஆங்கிலம் இரண்டாம் தாள்

ஏப்ரல் 10 - கணிதம்

ஏப்ரல் 12 - விருப்பமொழிப் பாடம்

ஏப்ரல் 17 - அறிவியல்

ஏப்ரல் 20 - சமூக அறிவியல்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2018 மே 23ம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

English summary
The Tamil Nadu Board exams will commence from 16th March 2018 to 20th April 2018 for students of Standard X, studying in schools affiliated to the state board. Plus two exam time table release on March 1st exam begins and Plus one on March 7.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X