For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக கோவில்களில் மறைந்திருக்கும் ஊழல்கள்: இந்து முன்னணி ராமகோபாலன்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக கோயில்களில் பெரிய அளவில் ஊழல் நடக்கிறது என கூறியுள்ளார் இந்து முண்ணனி அமைப்பாளர் ராமகோபாலன்

இந்துசமய அறநிலைத்துறை கட்டுபாட்டிலுள்ள கோயில்களில், "2 ஜி ஸ்பெக்டரம்" ஊழலை காட்டிலும் பலகோடி ரூபாய் அளவில் பெரிய ஊழல்கள் நடக்கிறது என இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்தார்.

ramagopalan

‘'தமிழக கோயில்களுக்கு சொந்தமாக நிலம் உட்பட பல கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன. இதில் வரும் வருமானத்தில் அதிக பணம் கோயில் அதிகாரிகளின் ஊதியம், சொகுசு வசதிகளுக்காக செலவு செய்யப்படுகிறது. கோயில்களில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. அவர்களை ஆடு, மாடுகள் போல நடத்துகின்றனர்.

" 2 ஜி ஸ்பெக்ட்ரம்" ஊழலை காட்டிலும் பலகோடி ரூபாய் அளவிற்கு கோயில்களில் ஊழல் நடக்கிறது. கோயில் ஆண்டு வருமானத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். பழநி மலைக்கோயில் படியிலுள்ள வேற்று மதத்தினர் கடைகளை அகற்ற வேண்டும்.

தமிழக கோயில்களுக்கு தனிவாரியமாக இயங்கவேண்டும். இந்து அமைப்பு தலைவர்கள் கொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்கிறது.

ஓட்டுக்கு ஆசைப்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய தமிழக அரசு தயக்கம் காட்டுகிறது. இதன் பலனை தேர்தலில் அவர்கள் அனுபவிப்பர். நாடு முழுவதும் "நரேந்திர மோடி" என்ற சுனாமி அலை எழுந்துள்ளது. அவர் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்'' என்றார்.

English summary
Tamil nadu temples corrupted by various political people and staffs. Hindu munnani leader ramakobalan says in a meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X