For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் தமிழகம் நம்பர் 1... நாடுமுழுவதும் 1.40 லட்சம் பேர் பாதிப்பு

கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் தலைவிரித்தாடுகிறது. நாடுமுழுவதும் 1.40 லட்சம் பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுவதும், 1.40 லட்சம் பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 216 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஏழு ஆண்டுகளாக இல்லாத வகையில், இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

தமிழகம் முழுவதும் கடந்த 30 நாட்களில் 7,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நன்னீரில் வளரும் கொசுக்கள்

நன்னீரில் வளரும் கொசுக்கள்

ஏடிஸ் ஏஜிப்டி என்ற கொசுவினால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. நல்ல தண்ணீரில் மட்டுமே இந்த கொசுக்கள் உயிர்வாழ்கின்றன. இந்தியாவில் இந்த ஆண்டு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் பலர் சரியான சிகிச்சையின்றி உயிரிழக்கின்றனர்.

பாதிப்பு அதிகரிப்பு

பாதிப்பு அதிகரிப்பு

நாடு முழுவதும், டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு அறிவிப்பின்படி, ஏழு ஆண்டுகளாக இல்லாத வகையில், இந்தாண்டு நாடு முழுவதும், 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் 216 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மத்திய அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

டெங்கு தமிழகம் நம்பர் 1

டெங்கு தமிழகம் நம்பர் 1

அதிகபட்சமாக தமிழகத்தில், 20 ஆயிரத்து, 141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 52 பேர் உயிரிழந்துள்னர். டெங்கு பாதிப்பில் அக்டோபர் வரை தமிழகம், மூன்றாம் இடத்தில் இருந்தது. கடந்த ஒரு மாதத்தில் 7,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகம் பாதித்த மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது.

கேரளாவில் 35 பேர் மரணம்

கேரளாவில் 35 பேர் மரணம்

கேரளாவில் 19 ஆயிரத்து, 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 பேர் உயிரிழந்துள்னர்.
கர்நாடகவில் 15 ஆயிரத்து 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேர் உயிரிழந்தனர்.

டெங்கு பாதிப்பு

டெங்கு பாதிப்பு

கேரளா, கர்நாடக மாநிலங்களில், டெங்கு பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. தமிழகத்தில் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகிறது. பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் காய்ச்சலுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

English summary
India has reported a total of 1,40000 dengue cases and 216 deaths until 20 November.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X