For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியின் வெற்றி.. இன்று தமிழ் நாளிதழ்களின் முதல் பக்கம் இது தான்..

By Veera Kumar
|

சென்னை: மத்தியிலும், தமிழகத்திலும் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை நாடாளுமன்ற தேர்தல் கொடுத்துள்ள நிலையில் தமிழ் நாளிதழ்கள் தங்களது முதல் பக்கத்தில் அதை எவ்வாறு செய்தியாக வெளியிட்டுள்ள என்பதை பார்க்கலாம்.

தினமணி

தினமணி

தினமணி நாளிதழ், தனது முதல் பக்கத்தை இடதுபக்கம் மோடிக்கும், வலது பக்கம் ஜெயலலிதாவுக்கும் என பிரித்து ஒதுக்கியுள்ளது. இரு தலைவர்களும் வெற்றியை குறிக்கும் வகையில் விரலை காண்பிக்கும் படங்கள் அதில் இடம் பெற்றுள்ளது. மோடியின் படத்துக்கு மேலே 'அமோக வெற்றியில் பாஜக' என்றும் ஜெயலலிதா படத்துக்கு மேலே 'அள்ளி குவித்தது அதிமுக' என்றும் தலைப்பிட்டுள்ளது. மோடியின் படத்துக்கு அருகே, 282/543 என்றும், ஜெயலலிதா படத்துக்கு அருகே 37/40 என்றும் கட்சிகள் பெற்ற சீட் எண்ணிக்கையை மதிப்பெண் போல போட்டு காண்பித்து எளிதில் புரியும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளது.

முதல்பக்கத்தின் அடியில் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளும், இடதுபக்கத்தில் மோடி அலையால் காங்கிரஸ் தலைவர்கள் தண்ணீரில் தத்தளிப்பது போன்ற கேலி சித்திரத்தையும் தினமணி வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி:

தினத்தந்தி:

தினத்தந்தியில் 'பாரதிய ஜனதா கூட்டணி-333', 'காங். கூட்டணி-62', 'இதர கட்சி-148' என சோல்டர் தலைப்பும், 'பா.ஜ.க 283 தொகுதிகளில் வெற்றி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி, மோடி பிரதமர் ஆகிறார்' என மெயின் தலைப்பு மூன்று வரிகளாகவும் போடப்பட்டுள்ளது. இதற்கடுத்தாற்போல பக்கத்தின் அடியில், '40 தொகுதிகளில் போட்டி: 37-ல் வெற்றி', 'அ.தி.மு.க வரலாற்று சாதனை' என தலைப்பிட்டு தமிழக தேர்தல் நிலவரத்தை வெளியிட்டுள்ளது தினத்தந்தி.

தினமலர்:

தினமலர்:

வழக்கமாக ஒரு வாக்கியத்தில் தலைப்பிடும் தினமலர் இன்று முழு சொற்டொடராக தலைப்பிட்டுள்ளது. அதில் 'பா.ஜ., வரலாறு காணாத வெற்றி!' என மெயின் தலைப்பும், 'தனிப்பெரும்பான்மையால் நிலையான ஆட்சி', 'எதிர்க்கட்சி அந்தஸ்து கூட காங்.,குக்கு கேள்விக்குறி' என்று டெக் அதாவது அடித்தலைப்பும் இட்டுள்ளது.

முதல்பக்கத்தின் அடியில், 'எம்.ஜி.ஆரை மிஞ்சினார் ஜெயலலிதா!' என தலைப்பிட்டு தமிழகத்தில் அதிமுக பெற்ற வெற்றியை எம்ஜிஆர் காலத்து வெற்றியுடன் ஒப்பிட்டு செய்தி வெளியாகியுள்ளது. அதற்கும் கீழே அடிப்பக்கத்தில், 'திமுக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகள் முட்டை' எடுத்துள்ளதை குறிப்பிட்டு கேலி சித்திரம் வெளியிட்டுள்ளது.

தினகரன்:

தினகரன்:

தினகரன் நாளிதழ் 'தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது பா.ஜ' என்று சோல்டர் தலைப்பும், 'பிரதமர் ஆகிறார் மோடி' என்று மெயின் தலைப்பும் போட்டுள்ளது. '337 இடங்களில் பா.ஜ. கூட்டணி அபாரம்', 'தனித்தே 283 தொகுதிகளை பிடித்து சாதனை', 'எதிர்க்கட்சி அந்தஸ்து கூட காங்கிரசுக்கு கிடைக்காது', 'ஆளும் மாநிலங்களிலும் பெரும் பின்னடைவு' என நான்கு அடித்தலைப்புகளை வெளியிட்டுள்ளது. முதல்பக்கத்தில் மோடி தனது தாயாரிடம் ஆசி பெரும் படம் இடம்பெற்றுள்ளது. ஜெயலலிதா பெற்ற வெற்றி முதல் பக்கத்தில் வெளியாகவில்லை.

English summary
Tamil news papers published loksabha election result in various angles, some drew cartoons as well.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X