For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருமலை நாயக்கருக்கு அரசு சார்பில் பிறந்த நாளா? சமூக வலைதளங்களில் கொந்தளிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திருமலை நாயக்கருக்கு தைபூச நாளில் தமிழக அரசு சார்பில் பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மதுரையை ஆண்ட மன்னர் திருமலைநாயக்கர் தைபூச நாளில் பிறந்தவர்; அவருக்கு அரசு சார்பில் பிறந்த நாள் கொண்டாடப்படும் என்று சனிக்கிழமையன்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு நாயக்கர்- நாயுடு சமூகத்தினர் வரவேற்பு தெரிவித்திருந்தாலும் சமூக வலைதளங்களில் பல்வேறு காரணங்களை முன்வைத்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ள சில கருத்துகள்:

பார்ப்பனியத்தை கொண்டாடுவது

பார்ப்பனியத்தை கொண்டாடுவது

எழுத்தாளர் மதிமாறன்: தமிழ் சமூகத்தின் மீது பார்ப்பனியத்தை, ஜாதியை, தமிழர் விரோத தீபாவளி போன்ற இந்து பண்டிகையைத் தீவிரமாகத் திணித்த, பழனி கோயிலை தமிழ் பண்டாரங்களிடமிருந்து பிடுங்கி, பார்ப்பனர்களுக்குத் தானமாகத் தந்த மாமன்னன் திருமலை நாயக்கன். திருமலை நாயக்கரை கொண்டாடுவது பார்ப்பனியத்தை கொண்டாடுவதே.

வாக்கு வங்கி அரசியல் மட்டுமல்ல..

வாக்கு வங்கி அரசியல் மட்டுமல்ல..

நாடக பேராசிரியர் அ. ராமசாமி: வரலாற்றுப் பாத்திரங்களை முன்வைப்பது நிகழ்காலத்தில் சமாதானத்தைக் கொண்டுவராது. அதுவும் நிலமானிய கால அரசர்கள் பெயராலோ, மதத்தலைவர்கள் பெயராலோ நடத்தப்படும் விழாக்கள் முரண்பாடுகளையே உருவாக்கும். மகேந்திரவர்மப் பல்லவனானாலும் ராசராச சோழனானாலும் திருமலை நாயக்கர் ஆனாலும் விளைவுகள் அதுதான். அரசர்களும் மதத்தலைவர்களும் அவர்களின் ஆதிக்கம் ஓங்கிய காலத்தின் அடையாளங்கள். அவர்களை முன்னிறுத்துவது மக்களாட்சியில் எதிர்விளைவுகளை உண்டாக்கும் திருமலை நாயக்கருக்கு எடுக்கப்போகும் விழாவின் பின்னணியில் வாக்குவங்கி அரசியல் மட்டும் இருப்பதாக நினைக்கமுடியாது. தெலுங்கைத் தங்கள் புழங்குமொழியாகக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட சதவீத வாக்குவங்கியைப் பங்குபோடுவதில் உண்டாக்கும் போட்டி என்ற நினைப்பது வெளிப்படைப்பார்வை.

தமிழகத்தில் கனன்று கொண்டிருக்கும் தமிழர் X தெலுங்கர் முரண்பாட்டைக் கூர்தீட்டும் அரசியலும் இருக்கும் என்று நினைப்பது நுண்ணரசியல் பார்வை.

வாக்குகளைப் பெறவே

வாக்குகளைப் பெறவே

மு. இரா. கலைச்செல்வன்: தேவர் சிலைக்கு தங்க கவசம், திருமலை நாயக்கர் அரசு விழா எல்லாம் அந்த குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகளை பெறவே தவிர வேறெதுமில்லை.

கருத்து கணிப்பு நடத்துங்க

கருத்து கணிப்பு நடத்துங்க

நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் அணி: தமிழ்ர்களின் செய்தி ஊடகங்கள் வரும் நட்களில் தைப்பூச நாளில் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழா அரச விழாவாக நடத்துவது சரியா தவறா என்று விவாதிக்கவும் தமிழ் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தவும் வேண்டும்.

அரசு விழாவா?

அரசு விழாவா?

கி.ச.அதிவீர ராம்குமார் பாண்டியர்: திருமலை நாயக்கர் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் - முதல்வர் எவன் மண்ணில் எவனுக்கு அரசு விழா எடுப்பது...வந்தவனையெல்லாம் ஆளவிட்டால் நாம இப்படித்தான் இருக்கும்!!!

தைப்பூச ஆப்பு

தைப்பூச ஆப்பு

Go Green: ஹனுமான் ஜெயந்தியை முன்னிட்டு ஒரேயொரு ஹனுமானுக்கு லட்சத்து எட்டு வடைகள் கொண்ட வடை மாலைகள் சாத்து;
திருமலை நாயக்கர் ஜெயந்தியை (தைப்பூசத்தன்று) முன்னிட்டு கோடிக்கணக்கான தமிழர்களுக்கும் ஒரேயொரு அறிவிப்பால் அல்வா, ஆப்பு, வேட்டு, குழிபறிப்பு...etc போன்றவைகள் ஒட்டுமொத்தமாகச் சாத்தப்பட்டன.
முத்தமிழ்ச்சங்கம் கண்ட பாண்டியர்கள் எங்கே? தமிழ்ப்புத்தாண்டு, தமிழிசை மீட்ட இராசராசசோழன் எங்கே? தமிழுக்காக இன்னுயிரீந்த மருதுபாண்டியர்கள் எங்கே?
சேரன் செங்குட்டுவன், கரிகாற்சோழன், ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் இவர்களெல்லாம் என்ன ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்களோ? ‪#‎டவுட்டு‬
வந்தாரை வாழவைக்கும் வடை நாடு... சீ... தமிழ்நாடு.
‪#‎தமிழ்நாடு‬ ‪#‎வேட்டைக்களம்‬ ‪#‎நாயக்கன்‬ ‪#‎சேரசோழபாண்டியர்கள்‬

தமிழரை கொன்று குவித்தவருக்கு விழாவா?

தமிழரை கொன்று குவித்தவருக்கு விழாவா?

Madhana Rajan: தமிழ் கடவுளான முருகனுக்கு கொண்டாடப்படும் தைப்பூசத்திற்கு அரசு பொது விடுமுறை அளிக்காமல்....
தமிழர்களை கொன்று குவித்து,அடிமை படுத்திய திருமலை நாயக்கர்(தெலுங்கர்) பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்!! தைப்பூச திருநாளான ஜனவரி 24ல் மன்னர் திருமலை நாயக்கர் பிறந்தநாள் மதுரையில் அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது..!! தடுத்து நிறுத்துவோம் !!
அனைவருக்கும் பகிருங்கள்

மார்புக்கு வரிவித்த திருவாங்கூருக்கும் விழா..

மார்புக்கு வரிவித்த திருவாங்கூருக்கும் விழா..

Selastin Raj: திருமலை நாயக்கர் விழாவை அரசு விழாவாக கொண்டாடுவோம் --- முதல்வர் ஜெயலலிதா

அப்படியே எட்டடி ஒத்தி போ என்ற நல்ல தத்துவத்துடன் மார்பு சேலை உரிமை மறுக்கபட்டு மார்பிற்கு வரிவிதித்த அந்த திருவாங்கூர் சமஸ்தான விழாவையும் அரசு விழாவாக கொண்டாட உத்தரவிடுங்கள்.அடிமைபடுத்தியவர்களை கொண்டாடுவதல்லவா நமது பண்பாடு......

இழிவுபடுத்தும் செயல்

‎வீரவன்னியன் தமிழன்‎:

‎வீரவன்னியன் தமிழன்‎:

ஆந்திரா தெலுங்கனா அரசுகள் எங்கள் பாட்டன் புலித்தேவன் தீரன்சின்னமலைக்கு விழா எடுக்காத போது திருமலை நாயக்கர் மன்னர்க்கு தமிழக அரசு விழா எடுப்பது தமிழர்களை இழிவுபடுத்தும் செயல்

நாங்க ஓட்டு போடமாட்டோம்

நாங்க ஓட்டு போடமாட்டோம்

Karthik Guru: மன்னர் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழா, இனி அரசே ஏற்று நடத்தும். ஜெ அறிவிப்பு...எம்மா கொடநாட்டு கோமளவல்லி நீ அரசியல் செய்வதற்கு தற்போது #மாமன்னர்தான் கிடைத்தாரா...* நீங்கள் பதவி ஏற்று நான்கரை ஆண்டுகளில் வராத அறிவு,அக்கறை இப்பொழுது ஏன்..உங்கள் அரசியல் லாபத்துக்கா..* நீங்கள் தலைகீழாக நின்றாலும் தெலுங்கு சமுதாய மக்கள் ஓட்டு உங்களுக்கு கிடைக்காது.

.* பிச்சைக்கார கட்சி கூட்டமெல்லாம் வந்தேறி, நாட்டை விட்டுவிட்டு வெளியேறு என்று சொன்னபோது நீங்கள் கொடநாட்டில்கோழி பிடித்துக் கொண்டிருந்தீர்களா..உங்கள் இழி அரசியலுக்கு எங்கள் இளைஞர்கள் கூட்டம் இனியும் பழியாகாது..இம்முறை#அதிமுக#திமுகவை பழிதீர்ப்போம் அரசியலில் இருந்து..*இது வரை அரசு விழாவாக இல்லாமல்எம்மன்னர் பிறந்தநாளை கொண்டாட தெரிந்த எங்களுக்கு இனி மேலும் எப்படி கொண்டாட வேண்டும் என்று தெரியும்..உங்கள் ஈன அரசியல் பிழைப்பை எங்களிடம் கொண்டு வந்து எங்கள் ஒற்றுமையை குலைக்கலாம் என்ற பகல் கனவு வேண்டாம் அம்மையாரே

தமிழரை அழிக்கும் செயல்

தமிழரை அழிக்கும் செயல்

தம்பி கௌதமராசன்: #‎திருமலைநாயக்கர்‬ பிறந்தநாளை இனி ஆண்டுதோறும் அரசு கொண்டாடும் -ஜெயலலிதா
24/1/2016 ‪#‎தைபூச‬ நாளில் நடத்தபடுமாம் தமிழன் விழாவை அழிக்கும் மற்றொரு செயல்.

இவ்வாறு ஃபேஸ்புக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamil movemnts supporters had opposed to celebrate Thirumalai Nayakkar's birth day by TN Govt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X