தமிழிசை கேட்டதாலேயே உறுப்பினராக சேர்த்தோம்.. ஆதாரத்துடன் போட்டுடைத்த மக்கள் நீதி மய்யம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழிசை இணையதளத்தில் இருந்து தொடர்பு கொண்டதாலேயே அவர் உறுப்பினராக சேர்க்கப்பட்டார் என மக்கள் நீதி மய்யம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் இன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை உறுப்பினராக சேர்த்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

கிடைக்கும் மின்னஞ்சல் முகவரிகளை கொண்டு உறுப்பினராக்கி கொள்வதா என்றும் சாடினார் தமிழிசை. இதற்கான ஆதாரத்தையும் அவர் காண்பித்தார்.

தமிழிசை குற்றச்சாட்டு

தமிழிசை குற்றச்சாட்டு

தன்னை கேட்காமல் மக்கள் நீதி மய்யம் தன்னை கட்சி உறுப்பினராக்கியுள்ளது என்றும் குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

தமிழிசை கேட்டதால்

இந்நிலையில் தமிழிசை குற்றச்சாட்டுக்கு மக்கள் நீதி மய்யம் தனது டிவிட்டர் மூலம் விளக்கமளித்துள்ளது. அதாவது, தமிழிசை தனது இணையதளத்தில் இருந்து தொடர்பு கொண்டதாலேயே அவர் கட்சியில் சேர்க்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம் காட்ட விரும்பவில்லை

படம் காட்ட விரும்பவில்லை

உங்களிடம் இருந்து அழைப்பு வந்த ஆதாரம், எங்களிடம் இருக்கிறது தமிழிசை அவர்களே என்றும் நீங்கள் காட்டியது போல நாங்களும் "படம்" காட்ட விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா? என கேட்டு தமிழிசையின் தொலைபேசி எண் மற்றும் இமெயில் ஐடி உள்ளிட்ட பிற தகவல்களை மக்கள் நீதி மய்யம் கறுப்பு மையால் அழித்துள்ளது.

பழைய முதலாளிகளின் கோபம்

அதற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ள மக்கள் நீதி மய்யம், உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரியை பூசியிருக்கிறோம் என்றும் உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்திற்கு அஞ்சினால் செய்த பதிவை ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Makkal Needhi Maiam explaines how Tamilisai became member of the party. Tamilisai only contacted the Makkal Needhi Maiam to be the member.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற