For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூச்சி மருந்து ஊழலில் இருந்து தப்பிக்க காவிரி வழக்கை வாபஸ் வாங்கியவர் கருணாநிதி... தமிழிசை விமர்சனம்

காவிரி வழக்கில் திமுகவின் கடந்த கால துரோக வரலாற்றை மறக்க முடியுமா என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஊழலில் இருந்து தப்பிக்க காவிரி வழக்கை வாபஸ் வாங்கியவர் கருணாநிதி-வீடியோ

    சென்னை: பூச்சி மருந்து ஊழலில் இருந்து தப்பிக்க காவிரி வழக்கை வாபஸ் வாங்கியவர் கருணாநிதி என்று தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

    காவிரி வழக்கு குறித்து மத்திய அரசை மு.க.ஸ்டாலின் குறை கூறினார். இந்நிலையில் இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், காவிரி வழக்கில் திமுகவின் கடந்த கால துரோக வரலாற்றை மறக்க முடியுமா.

    காவிரி பிரச்சினையில் மத்திய அரசை குறை சொல்லும் மு.க.ஸ்டாலின் மத்தியில் 18 ஆண்டுகள், தமிழகத்தில் 25 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக காவிரி பிரச்சினையை ஏன் தீர்க்கவில்லை.

    பூச்சி மருந்து

    பூச்சி மருந்து

    சர்க்காரியா கமிஷன், பூச்சி மருந்து ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டி அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் கட்டளைக்கு அடிபணிந்து காவிரி வழக்கை வாபஸ் வாங்கியவர் அன்றைய திமுக தலைவர் கருணாநிதி.

    காலதாமதம்

    காலதாமதம்

    நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசு இதழில் 7 ஆண்டு காலம் காலதாமதம் ஆன போது அமைதியாக இருந்தது திமுக ஆட்சி. இன்று நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த ஆகும் கால தாமதத்தை குறை கூறுகிறது.

    குழப்பங்கள்

    குழப்பங்கள்

    இறுதி தீர்ப்பில் உள்ள 12-க்கும் அதிகமான சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள், விடை காணமுடியாத கேள்விகள் என பலதரப்பு விவாதங்களை கர்நாடக அரசு எழுப்பியுள்ள நிலையில் கூட்டாட்சி தத்துவத்தின்படி முறையான விவாதம் நடத்தி தீர்ப்பை சட்டமாக்கி செயல்படுத்துவது தானே ஜனநாயக நடைமுறை ஆக முடியும்.

    சிக்கலுக்கு காரணம் திமுக

    இதை மறந்து மத்திய அரசை தினமும் குறை சொல்லும் திமுக செயல்தலைவர் அறிக்கை திமுகவின் கடந்த கால காவிரி துரோகமே இன்றைய நடைமுறை சிக்கலுக்கு காரணம் என்பதே உண்மை என்று தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Tamilisai Soundarrajan says that DMK cheated Tamil people in Cauvery dispute case for their interests and to escape from scandal cases.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X